'வலிமை' படத்தில் அஜித் கெட்அப் குறித்து லீக் செய்த 'மாஸ்டர்' பட நடிகை..! அப்போ வேற லெவல் கொண்டாட்டம் தான்!

By manimegalai a  |  First Published Jun 4, 2021, 1:37 PM IST

சீரியல் நடிகையாக அறிமுகமாகிய, மாஸ்டர் , வலிமை, போன படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள சங்கீதாவிடம் ரசிகர்கள் 'வலிமை' குறித்து அப்டேட் கேட்ட அவரும் செம்ம மாஸ் தகவலை லீக் செய்துள்ளார்.


'தல' அஜித் நடித்துள்ள 'வலிமை' படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு கொரோனா சமயம் என்பதால் தள்ளி போனதை தொடர்ந்து, தொடர்ந்து ரசிகர்கள் இந்த படம் குறித்த அப்டேட் குறித்து அனைத்து பிரபலங்களிடமும் கேட்டு வருகிறார்கள். அந்த வகையில், சீரியல் நடிகையாக அறிமுகமாகிய, மாஸ்டர் , வலிமை போன படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள சங்கீதாவிடம் ரசிகர்கள் 'வலிமை' குறித்து அப்டேட் கேட்ட அவரும் செம்ம மாஸ் தகவலை லீக் செய்துள்ளார்.

Tap to resize

Latest Videos

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் 'வலிமை'. அஜித்தின் 60வது படமாக தயாராகி வரும் இதில், அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக 'காலா' பட நடிகை ஹீமோ குரோஷி நடித்துள்ளார். இந்நிலையில் அஜித் ரசிகர்களின் பல நாள் ஆசையை நிறைவேற்றும் விதமாக 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் கொரோனா இரண்டாவது அலை சற்று தணிந்த பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் ஒரு வருடங்களுக்கு மேலாக எங்கு சென்றாலும், அப்டேட் கேட்டு வரும் ரசிகர்களின் தொந்தரவு தாங்காமல், ஒரு நிலையில் அஜித்தே அறிக்கை வெளியிட்டு விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் இன்னும் பல ரசிகர்கள், 'வலிமை' குறித்து எதாவது லேட்டஸ்ட் தகவலை யார் வாயில் இருந்து பிடுங்கலாம் என பல பிரபலன்களிடமும் கேட்பதை வழக்கமாகவே வைத்துள்ளனர்.

அந்த வகையில், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள... சங்கீதா என்ற துணை நடிகை ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடியபோது ’வலிமை’ அப்டேட் குறித்து கேள்வி எழுப்பிய ரசிகர்களுக்காக சூப்பர் தகவலை வெளியிட்டுள்ளார். அஜித் இதற்கு முன் நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், மேலும் இந்த கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைத்து, 10 முதல் 15 வயது குறைந்து செம்ம ஸ்மார்ட்டாக காணப்படுவார் என அவரது கெட்அப் குறித்து தெரிவித்துள்ளார்.

சங்கீதா வெளியிட்டுள்ள இந்த தகவல், தல ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பலர் எப்போது கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்து, 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!