ஜெயிலர் பட பாணி.. இயக்குனருக்கு Sweet Surprise கொடுத்த மார்க் ஆண்டனி தயாரிப்பாளர் - ஆதிக் ஹாப்பி அண்ணாச்சி!

Ansgar R |  
Published : Oct 30, 2023, 09:46 PM IST
ஜெயிலர் பட பாணி.. இயக்குனருக்கு Sweet Surprise கொடுத்த மார்க் ஆண்டனி தயாரிப்பாளர் - ஆதிக் ஹாப்பி அண்ணாச்சி!

சுருக்கம்

Adhik Ravichandran : பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா மற்றும் விஷால் ஆகிய இருவரும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படமான மார்க் ஆண்டனி.

கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி இந்தியாவில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் சுமார் 100 கோடி ரூபாய் வசூலை எட்டி ரவிச்சந்திரனுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது. நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா மற்றும் விஷால் ஆகிய இருவரும் போட்டி போட்டு தங்களுடைய நடிப்பை இந்த திரைப்படத்தில் வெளிப்படுத்தினார்கள்.

இந்த மெகா ஹிட் திரைப்படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வினோத் குமார் தயாரித்து வழங்கியிருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான "திரிஷா இல்லனா நயன்தாரா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக களம் இறங்கியவர் தான் ஆதித் ரவிச்சந்திரன். 

ராமுடன் கைகோர்க்கும் சியான்.. விரைவில் வரப்போகுது விக்ரம் 63 அப்டேட்? - தயாரிப்பாளர் யார் தெரியுமா?

அந்த திரைப்படத்தில் இவர் ஒரு கேமியோ செய்திருப்பார், அதேபோல அதனை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்" திரைப்படத்தையும் இவர் இயக்கி வெளியிட்டு இருந்தார். இறுதியாக இவ்வாண்டு தொடக்கத்தில் வெளியான பிரபுதேவா நடிப்பில் வெளியான பஹீரா  திரைப்படத்தை அதிக ரவிச்சந்திரன் இயக்கியிருந்த நிலையில் அது பெரிய அளவில் ஹிட் ஆகாமல் போனது. 

 

ஆனால் அவருடைய இந்த எட்டு வருட திரை வாழ்க்கையில் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்த ஒரு திரைப்படமாக மாறி உள்ளது மார்க் ஆண்டனி. பட்டி தொட்டி எங்கும் இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்பொழுது அமேசான் பிரைம் OTT தளத்திலும் பெருந்தொகைக்கு இந்த திரைப்படம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. 

முதல்நாளே அழவச்சிட்டீங்களே டா... மாயா அவமானப்படுத்தியதால் கதறி அழுத அர்ச்சனா- பிக்பாஸ் வீட்டில் முற்றும் மோதல்

இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் அவர்கள், ஒரு புத்தம் புதிய பிஎம்டபிள்யூ காரை தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களுக்கு பரிசாக வழங்கி உள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!