விஸ்வாசத்தை அட்சித் தூக்கிய பேட்ட !! மரண மாஸ் காட்டிய வீடியோ பாடல் !!

Published : Feb 03, 2019, 08:20 AM IST
விஸ்வாசத்தை அட்சித் தூக்கிய பேட்ட !! மரண மாஸ் காட்டிய வீடியோ பாடல் !!

சுருக்கம்

விஸ்வாசம் படத்தின் வேட்டி கட்டு பாடல் யூ டியூபில் வெளியாகி உள்ள நிலையில், அதற்குப் பின் வெளியான பேட்ட படத்தின் மரண மாஸ் பாடல் 20 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டி முதலிடத்தில் உள்ளது.  

ரஜினி நடித்த பேட்ட திரைப்படமும், அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் பொங்கல் திருநாளையொட்டி கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியானது. இரண்டு படங்களுமே வசூலில் சக்கைப் போடு போட்டன.

இரண்டு படங்களுக்குமே கடுமையான போட்டி இருந்த நிலையில், விஸ்வாசம் படம் வசூலில் பேட்ட படத்தை மிஞ்சியது. இதையடுத்து படத்தின் டிரைலர் வசனங்களை வைத்து இரு தரப்பு  ரசிகர்களும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகிறார்கள் 
.
இந்நிலையில்  இரு படங்களூககு இடையே மீண்டும் ஒரு போட்டி தொடங்கியுள்ளது. நேற்று இரவு 7 மணிக்கு யூ டியூபில்  விஸ்வாசம் படத்தின் வேட்டி கட்டு பாடல் வீடியோ வெளியானது. இந்தப் பாடல் வெளியிட்ட சில மணி நேரங்களில் 7.06 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இதையடுத்து இரவு 8 மணிக்கு பேட்ட படத்தின் மரண மாஸ் பாடல் யூ டியூபில் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் வெளியிட்ட ஒரு சில மணி நேரங்களில் 20 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டி செம மாஸ் காட்டி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Most Profitable Movie in 2026 : பட்ஜெட் வெறும் 9 கோடி... ஆனா வசூல் 80 கோடி! கோலிவுட்டை மிரள வைத்த படம் எது?
கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்.! மைக் மோகனின் நேர்மையான சினிமா பயணம்.!