திரைப்படமாகிறது மன்மோகன் சிங்  வாழ்க்கை வரலாறு!

 
Published : Nov 05, 2017, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
திரைப்படமாகிறது மன்மோகன் சிங்  வாழ்க்கை வரலாறு!

சுருக்கம்

manmohan sing life history make movie

பாலிவுட் திரையுலகில் பெரும்பாலும் பல்வேறு துறைகளில் சாதித்த பிரபலமானவர்களின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுப்பதில் இயக்குனர்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட காந்தி அடிகள், அம்பேத்கர், இந்திராகாந்தி, பகத்சிங், தெண்டுல்கர், டோனி, மேரி கோம்  உள்ளிட்ட படங்கள் வசூலிலும் சாதனை படைத்தது.

தற்போது அந்த வரிசையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்க்கை வரலாற்றை விஜய் ரத்னாகர் குட்டே இயக்குகிறார் .  இந்தப் படத்துக்கு ‘தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்று பெயர் வைத்துள்ளனர். மன்மோகன்சிங் யாரும் எதிர்பாராத நேரத்தில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதை குறிப்பிடும் வகையில் இந்தத் தலைப்பை தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் மன்மோகன்சிங் வேடத்தில் அனுபம்கெர் நடிக்கிறார். சுனில்போஹ்ரா தயாரிக்கிறார். மேலும் மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கி கவர்னராகவும், உலக வங்கியில் முக்கியப் பொறுப்பிலும் இருந்தது பின் இவர்  நிதி அமைச்சர் ஆனது  மற்றும் இவரை சோனியா காந்தி பிரதமர் ஆக்கியது முதல் இவர் தொடர்ந்து 10 வருடங்கள் பிரதமராக நாட்டை ஆண்டது வரை படமாக்கப்பட உள்ளது.

மேலும் இவருடைய ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள், மற்றும் இயற்கை சீற்றங்களையும் மையப்படுத்தி படமாக்க உள்ளனர் படக்குழுவினர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிங்கிள் பசங்க டைட்டில் வின்னர் யார்? பைனல்ஸில் கூமாபட்டி தங்கப்பாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
தாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது