காதலிக்க சொல்லி பயங்கர டார்ச்சர்.. இயக்குனர் மீது கணவனை பிரிந்த நடிகை பகீர் புகார்.

Published : May 06, 2022, 03:48 PM IST
காதலிக்க சொல்லி பயங்கர டார்ச்சர்.. இயக்குனர் மீது கணவனை பிரிந்த நடிகை பகீர் புகார்.

சுருக்கம்

தன்னை காதலிக்க சொல்லி திரைப்பட இயக்குனர் வற்புறுத்தி வந்ததாக நடிகை மஞ்சு வாரியர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை காதலிக்க சொல்லி திரைப்பட இயக்குனர் வற்புறுத்தி வந்ததாக நடிகை மஞ்சு வாரியர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாத் துறையில் காதல், கல்யாணம், விவாகரத்து என்பது சகஜமாக அரங்கேறி வருகிறது. சமீபத்தில் சில முன்னணி நடிகைகள் கணவனைப் பிரிந்தது பேசு பொருளாக மாறியுள்ளது. அதில் குறிப்பிடத்தக்கவர் நடிகை சமந்தா ஆவர். அதேபோல் திரைத்துறையில் காதல் சர்ச்சைகள் என்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் மலையாள முன்னணி நடிகைகளில் ஒருவரான மஞ்சுவாரியர் இயக்குனர் ஒருவர் தன்னை காதலிக்கச் சொல்லி டார்ச்சர் செய்து வந்ததாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள மஞ்சுவாரியர், தமிழ் திரைப்படத்தில் தனுஷ் நடித்த அசுரன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆவார். இவர் மலையாள நடிகர் திலீப்பை திருமணம் செய்த நிலையில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரைக் குறித்து சமூக வலைத்தளத்தில் மலையாளத் திரைப்பட இயக்குனர் சனல்குமார் சசிதரன் என்பவர் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டு வந்தார். அந்த தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது, மஞ்சு வாரியர் காணாமல் போய்விட்டார் என்றும், அவர் யாருடைய கட்டுப்பாட்டிலோ இருக்கிறது என்றும் அவர் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து மஞ்சுவாரியர் எங்கே என்ற கேள்வி எழுந்தது. உங்களை தான் கொச்சி காவல்துறை ஆணையரை சந்தித்து மஞ்சுவாரியர் சனல் குமார் சசிதரன் மீது புகார் கொடுத்துள்ளார்.

இயக்குநர் சனல்குமார் சசிதரன் என்பவர் தன்னை குறித்து தொடர்ந்த அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்நிலையில் போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். மேலும் சனல்குமார் சசிதரன் மீது மஞ்சுவாரியர் அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார். அதில், சனல் குமார் சசிதரன் இயக்கிய கயட்டம் திரைப்படத்தில் நடித்தபோது என்னை காதலிப்பதாக கூறினார், ஆனால் அதை நான் ஏற்க மறுத்து விட்டேன், அதன்பிறகும் அவர் தொடர்ந்து என்னை காதலிப்பதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்தார் அவரின் நடவடிக்கையை நான் கண்டித்தேன். ஆனால் அவர் விடாமல் தொடர்ந்து என்னை காதலிப்பதாக கூறி வருகிறார்.

மேலும் சமூக வலைதளங்களில் என்னைக் குறித்து தவறான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன், எனவை நான் அவர் மீது புகார் கொடுத்துள்ளேன், அவர் என்னைக் குறித்து பதிவிட்டு வந்த கருத்துக்களை நான் கண்டு கொள்ளாமல் இருந்தேன், ஆனால் அவர் என்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார். இந்நிலையில்தான் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Vijay- Trisha : மீண்டும் திரிஷா உடன் பயணம்...! வைரலாகும் விஜய் டிக்கட் உண்மையா?
மலேசியா கார் ரேஸ்... முதல் சுற்றிலேயே ரிப்பேர் ஆகி நின்ற அஜித் கார் - கடும் அப்செட்டில் ரசிகர்கள்