ஏன் விவாகரத்து பெற்றேன்... கண்கலங்கியவாறு மனம் திறந்தார் மனிஷா கொய்ராலா...

 
Published : Jun 13, 2017, 04:56 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
ஏன் விவாகரத்து பெற்றேன்... கண்கலங்கியவாறு மனம் திறந்தார் மனிஷா கொய்ராலா...

சுருக்கம்

manisha koirala open talk her divorce

நடிகை மனிஷா கொய்ராலா பாலிவுட் மற்றும் இன்றி கோலிவுட்டிலும் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்தவர்.

திரைத்துறையில், முன்னணி கதாநாயகியாக இருக்கும்போதே நேபாள தொழிலதிபர் சாம்ராட் என்பவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.

ஆனால் இவர்களுடைய திருமண பந்தம் முழுமையாக இரண்டு வருடம் கூட நீடிக்க வில்லை, 2012 ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இது வரை ஏன் விவாகரத்து பெற்று பிரிந்தேன் என வெளியில் கூறாமல் இருந்த இவர் முதல் முறையாக தன்னுடைய விவகாரத்துக்கான காரணத்தை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், என்னுடைய திருமண பந்தம் எப்படி இருக்கவேண்டும் என நான் கனவு கண்டேனோ அது போல் இல்லை. இதனால் ஒரு நிலையில் பிரிந்து விட முடிவெடுத்தேன். இதுவரை என் திருமண வழக்கை தோல்வியடைந்ததால் ஒரு முறை கூட நான் கவலைப்பட்டது இல்லை என தெரிவித்தார்.

மேலும் நான் கேன்சர் நோயால் அவதி பட்டபோது என்னோடு நெருக்கமாக இருந்த நண்பர்கள் மற்றும் சொந்தங்களும் என்னை விட்டு விலகினார்கள் ஒரு வேளை நான் அவதி படுவதை பார்க்க அவர்களுக்கு மனம் இல்லை என நினைக்கிறேன். 

எது எப்படி இருந்தாலும் என் வாழ்வில் நடத்த அனைத்து நல்லது மற்றும் கெட்டதற்கு நானே பொறுப்பேற்கிறேன் என கண்கலங்கியவாறு தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!