இந்த வயதில் இது தேவையா...? மனிஷா கொய்ராலாவின் உடையால் முகம் சுழித்த ரசிகர்கள்...!  

 
Published : Jul 12, 2018, 04:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
இந்த வயதில் இது தேவையா...? மனிஷா கொய்ராலாவின் உடையால் முகம் சுழித்த ரசிகர்கள்...!  

சுருக்கம்

manisha koirala bikini dress photo leaked

தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'பாம்பாய்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் கமலஹாசனுடன் 'இந்தியன்', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'பாபா'  அர்ஜுனுடன் 'முதல்வன்', உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மனிஷா கொய்ராலா.

 

இவர் 90-களில் முன்னணி நடிகையாக இருந்த போது, மிகவும் கவர்ச்சியாக நடித்து பல முன்னணி நடிகைகளுக்கு, டஃப், போட்டி கொடுத்த இவர், இதுவரை எந்த படத்திலும் நீச்சல் உடையில் நடித்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது 'லஸ்ட் ஸ்டோரீஸ்' என்ற படத்தில் மனுஷா கொய்ராலா முக்கிய கதாப்பாத்திரத்தில்  நடித்து வருகிறார். இந்த படத்தின் ஒரு காட்சியில் நீச்சல் உடையில் நடித்துள்ளார். 

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள், பலர் 47 வயதில் இப்படி நடிக்க ஏன் ஒப்புக்கொண்டார் என விமர்சித்து வருகின்றனர். அதேபோல் சில ரசிகர்கள் இந்த புகைப்படம் முகம் சுழிக்கும் விதத்தில் உள்ளதாக கூறுகிறார்கள்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மனிஷா "இது இயக்குனர் Dibakar Banejeeன் ஐடியா. அவர் அப்படி ஒரு சீன் நடிக்கவேண்டும் என அவர் கூறியதும், 'நான் இளம்வயத்தில் கூட இப்படி நடித்ததில்லை' என கூறினேன். அதற்கு அவர் 'அந்த ஒரு காரணத்துக்காக தான் இப்படி நடிக்க வேண்டும்' என கூறினார்."

"எப்போதும் தன்னை அழகாக காட்டிக்கொள்ள தான் எந்த ஒரு பெண்ணும் விரும்புவாள். ஆனால் படத்தின் கதாப்பாத்திற்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராகவுள்ளேன்" என மனிஷா கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' பட கதை இதுதானா? லீக்கான ஸ்டோரி... ஷாக் ஆன படக்குழு..!
கொளுத்திப்போட்ட அருணின் அம்மா.. முத்துவுக்கு வில்லியாக மாறிய சீதா - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்