பிரச்சனைக்கு காரணம் இவர் தான்..! தவறு செய்தவரை ஜெயிலில் தள்ளிய ஜனனி..!

 
Published : Jul 12, 2018, 02:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
பிரச்சனைக்கு காரணம் இவர் தான்..! தவறு செய்தவரை ஜெயிலில் தள்ளிய ஜனனி..!

சுருக்கம்

janani punishment give the mahath

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் மஹத், பலாஜியுடம் செம சண்டை போட்டார். பின், வயது வித்தியாசம் பார்க்காமல் பாலாஜியை திட்டியதற்காக அவரிடம் மன்னிப்பும் கேட்டார்.

இதைதொடர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் கொடுத்த 'திருடன் போலீஸ்' டாஸ்க்  வேண்டவே வேண்டாம் என்றும் இதனை மிகவும் மோசமாக சில போட்டியாளர்கள் விளையாடி வருவதாக கூறி பிக்பாஸ்சிடம் போட்டியாளர்கள் முறையிட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில்.. நடிகை ஜனனி நாட்டாமை பொறுப்பை வகிப்பது போல் உள்ளது. இந்த பொறுப்பிற்கு ஏற்றாப்போல் தோளில் துண்டு போட்டவாறு 'மஹத் நீங்கள் உங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்யவில்லை என கூறி, அது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என கூறுகிறார்.

இதற்கு மஹத் நான் அதிகம் கோவப்பட்டுள்ளேன், அதே போல் திட்டியுள்ளேன் என தன்னுடைய தவறுகளை முன்வந்து ஒற்றுக்கொள்கிறார்.

இதைதொடர்ந்து பேசும் ஜனனி, மஹத்தின் இந்த செய்கையால் இவருக்கு இன்று ஜெயில் தண்டனை கொடுப்பதாக தெரிவிக்கிறார்.

 

பின் ஜெயிலில் மஹத் இருக்கும் காட்சிகள் காட்டப்படுகிறது. அதில் தயவு செய்து வரும் சனிகிழமை வரை தன்னை ஜெயிலில் இருந்து எடுக்க வேண்டாம் என மனம் உருகி பிக்பாஸ்க்கு கோரிக்கை வைக்கிறார் மஹத்.

மஹத் வைக்கும் கோரிக்கை ஏற்க்கப்படுமா..? இவரின் இந்த முடிவிற்கு காரணம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' பட கதை இதுதானா? லீக்கான ஸ்டோரி... ஷாக் ஆன படக்குழு..!
கொளுத்திப்போட்ட அருணின் அம்மா.. முத்துவுக்கு வில்லியாக மாறிய சீதா - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்