
தமிழில் பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட பல திரைப்பபடங்களில் நடித்து பிரபலமானவர் மனிஷா கொய்ராலா. இதே போல் இந்தி பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.
மனிஷா கொய்ராலாவுக்கு கடந்த 2012 அம ஆண்டு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று மீண்டார். தற்போது புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
நைனிடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய மனிஷா கொய்ராலா, எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மக்களுக்கு தெரியப்படுத்த புத்தகம் எழுதினேன் என தெரிவித்தார்.
என்னை பார்த்து யாரேனும் புற்றுநோயில் சிக்கி குணமடைந்தவர் என்று சொன்னால் அதற்காக வருத்தப்பட மாட்டேன். புற்றுநோய் பாதிப்பில் நான் சிக்கியதை மறந்து எனது நடிப்பு மற்றும் திறமை பற்றி மக்கள் ஒரு நாள் பேசுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.
புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டபோது நான் சாவை எதிர்கொண்டேன். ஆரம்பத்தில் மது எனக்கு பழக்கம் இருந்தது. இதனால்தான் எனது வாழ்க்கை மோசமாக மாறியது. வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்பட்டது. ஆனால் இப்போது எனது மதுப் பழக்கத்தை முற்றிலும் விட்டுவிட்ட பின் தற்போது புதிதாக பிறந்த உணர்வு ஏற்பட்டுள்ளதாக மனிஷா கொய்ராலா கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.