நடிகர் தற்போது அடுத்தடுத்து திரைப்படங்கள் நடிப்பதில் செம்ம பிஸியாகி வருகிறார். அந்த வகையில், உடல் எடையை குறித்து, சில நாட்களிலேயே, சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ’ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார். இந்த படத்தில் டீசர் தீபாவளி விருந்தாக வெளியாகி சிம்பு ரசிகர்களை குஷியாக்கியது.

இதை தொடர்ந்தும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்கும் மற்றொரு படமான ’மாநாடு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி குறித்த தகவலை, இந்த படத்தின் = இயக்குனர் வெங்கட்பிரபு வெளியிட்டுள்ளார்.
’மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 21 ஆம் தேதி 10.44 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சிம்புவின் டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த அறிவிப்பில் ஒரு போஸ்டரும் வெளியாகி உள்ளது. இதில் சிம்பு இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் சிம்பு துப்பாக்கியை அருகில் வைத்துக்கொண்டு தொழுகையில் இருப்பது போன்றும், பின்னணியில் அரசியல் கலவரம் நடப்பது போன்றும் அந்த போஸ்டரில் உள்ளது. இந்த போஸ்டரே அட்டகாசமாக இருக்கும் நிலையில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எகிறியுள்ளது.
First look on 21 nov 2020 @ 10:44am pic.twitter.com/LRIMQrO5F7