"மால்டோ கித்தாப்புல" என்பதற்கு அர்த்தம் தெரியுமா?... படக்குழு அளித்திருக்கும் 'அடடே' விளக்கம்...!

Published : Nov 09, 2019, 10:27 PM IST
"மால்டோ கித்தாப்புல" என்பதற்கு அர்த்தம் தெரியுமா?... படக்குழு அளித்திருக்கும் 'அடடே' விளக்கம்...!

சுருக்கம்

'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'ஹீரோ'. இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரனின் அடுத்த படைப்பாக தயாராகும் இந்தப் படத்தை, கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.  

'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'ஹீரோ'. இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரனின் அடுத்த படைப்பாக தயாராகும் இந்தப் படத்தை, கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.


இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். தமிழில் அவர் அறிமுகமாகும் முதல் படம் இது. மேலும், ஹீரோ படத்தில் இன்னொரு ஹீரோவாக 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் நடித்துள்ளார். 

தற்கால கல்வி முறையை தோலுரித்துக் காட்டும் வகையில், சமூக அக்கறையுடன் கூடிய படமாக உருவாகும் 'ஹீரோ' படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 


ஏற்கெனவே, இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் படத்தின் 'மால்டோ கித்தாப்புல' என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டது. 

யுவனின் துள்ளலான இசையில் வெளிவந்த இந்த பாடல், ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறது. குறிப்பாக, ரோகேஷ் எழுதியுள்ள இந்தப் பாடலில் இடம் பெறும் 'மால்டோ கித்தபுலே' என்றால் என்ன அர்த்தம் என்று புரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்தனர்.


அவர்களது குழப்பத்தை போக்கும் வகையில், 'மால்டோ கித்தாப்புல' என்றால் என்ன என்பது குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. மால்டோ கிட்டபுலே என்றால் கெத்தா, ஸ்டைலா, துணிச்சலுடன் சுற்றி திரிபவர்' என்று அர்த்தமாம். 

எதிர்பார்த்த மாதிரியே 'ஹீரோ' சிங்கிள் ட்ராக் ரசிகர்களிடையே செம லைக்சை அள்ளிவரும் நிலையில், படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில், படத்தின் இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தொடர்பான அறிவிப்பை படக்குழுவிடமிருந்து எதிர்பார்க்கலாம். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் 'ஹீரோ' படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையை மனதில் வைத்து வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!