”மீ டூ” ஹேஷ் டேகில் வைரமுத்துவை பற்றி சின்மயி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பிறகு , மிகப்பெரிய அளவிலான சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் சின்மயி. வைரமுத்து விவகாரத்தினை சின்மயி ஆரம்பித்த பிறகு இங்கொன்றும் அங்கொன்றுமாக , அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் கூடிக்கொண்டே வருகிறது.
”மீ டூ” ஹேஷ் டேகில் வைரமுத்துவை பற்றி சின்மயி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பிறகு , மிகப்பெரிய அளவிலான சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் சின்மயி. வைரமுத்து விவகாரத்தினை சின்மயி ஆரம்பித்த பிறகு இங்கொன்றும் அங்கொன்றுமாக , அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் கூடிக்கொண்டே வருகிறது.
என் அம்மாவிடம் வைரமுத்து தவறாக பேசினார். என் உறவினரிடம் தவறாக பேசினார். ஃபோன் கால் செய்து ஆபாசமாக கவிதைகள் சொல்லி தொல்லை செய்தார் என அவர் மீதான ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களாக தற்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.
undefined
இந்த புகார்கள் தான் இப்போது சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக போய்க்கொண்டிருக்கிறது. என்ன தான் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டாலும், இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா? இத்தனை நாள் கழித்து இப்போது வந்து இப்படி குற்றம் சாட்ட காரணம் என்ன? அவர் பிரபலமாக இருப்பதால் அவரை அவமானப்படுத்தும் நோக்கில் தான் சின்மயி இப்படி செய்கிறார் என சின்மயிக்கு எதிராக தான் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் சின்மயிக்கு ஆதரவு குரல்களும் பெண்கள் பக்கத்தில் இருந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. மறைந்த பிரபல நடிகரும் பாடகருமான மலேசியா வாசுதேவனின் மருமகளும் அந்த வகையில் சமீபத்தில் , சின்மயிக்கு ஆதரவாக முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்த பதிவில் “ எல்லோரும் பாதிக்கப்பட்ட சின்மயியை கேள்வி கேட்கிறீர்களே தவிர, தவறு செய்த வைரமுத்துவிற்கு எதிராக எந்த கேள்வியும் கேட்கவில்லையே அது ஏன்? எத்தனை காலம் ஆனது , இப்போது புகார் கூற காரணம் என்ன என்று கேட்கும் அனைவரும் இந்த பிரச்சனை குறித்து விசாரிப்பதற்கு ஆதரவாக இல்லாதது ஏன்? சின்மயி இப்போது இந்த பிரச்சனையை பேச ஆரம்பித்திருப்பது, இனி யாரும் பாதிக்கப்பட்டுவிட கூடாது என்பதனால் தான். அமைதியாக இருக்கும் பலருக்காக அவர் இப்போது குரல் எழுப்பி இருக்கிறார்.
எனக்கு வைரமுத்துவை பற்றி முன்னரே தெரியும், நான் பிரபல சேனல் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது, அங்கு வந்திருந்த இளம் போட்டியாளர் ஒருவரை வைரமுத்து தன் வலையில் விழ வைக்க முயன்றதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். என்று அந்த முகநூல் பதிவில் தெரிவித்திருக்கிறார் மலேசியா வாசுதேவனின் மருமகள் ஹேமா மாலினி.