
நாளுக்கு நாள் திரையுலக பிரபலங்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து கொண்டே போகிறது. அதிலும் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது புகார் தெரிவித்ததால் இருந்து நாளுக்கு நாள் பிரபலங்கள் முதல் சக பெண்கள் வரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தான் அனுபவித்த, பாலியல் தொல்லை குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், திரையுலகில் பாலியல் புகார் பாலிவுட், கோலிவுட்டில் பற்றி எரிவது போல் மலையாளத்திலும் சூடுபிடித்துள்ளது.
மூத்த நடிகர் அலென்சியர் தன்னிடம் தவறாக நடக்கமுயன்றார் என நடிகை திவ்யா கோபிநாத் புகார் கூறியுள்ளார்.
திவ்யா 4வது படத்தில் நடித்தபோது, ஒரு நாள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அலென்சியர் தன்னுடைய மார்பு பகுதியை பார்த்துக்கொண்டிருந்தார் என்றும்... அதே போல் ஒருநாள் தான் அறையில் இருந்தபோது குடிபோதையில் நுழையமுயன்றார். உதவி இயக்குனர் வந்ததால் தப்பித்தேன். மற்றொருமுறை நானும் மற்றொரு நடிகையும் அறையில் தங்கியிருந்தோம்.
நான் தூங்கிக்கொண்டிருந்தபோது அவர் பாத்ரூம் சென்றிருந்த நிலையில், அலென்சியர் நான் படுத்து கொண்டிருந்த பொது திடீர் என உள்ளே வந்து என்னுடன் படுத்துக்கொண்டார். தன்னுடன் படு என்று கூறி கையை இழுத்து எழுந்திருக்க முயன்ற தன்னை கட்டாயப்படுத்தினார். நான் கூச்சலிடவே அந்த நடிகை என்ன என்று கேட்டதால்... அவர் வெளியே சென்றார் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.