ஹீரோயின் அவதாரம் எடுக்கும் பாபநாசம் குட்டி பொண்ணு எஸ்தர்...

 
Published : May 09, 2017, 12:34 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
ஹீரோயின் அவதாரம் எடுக்கும் பாபநாசம் குட்டி பொண்ணு எஸ்தர்...

சுருக்கம்

malayalam child actress introduce in heroine

மலையாளத்தில் கிட்ட திட்ட 50 திற்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் எஸ்தர்.

பெரும்பாலும் ஹீரோயின்களின்  குழந்தை பருவத்திலும், ஹீரோயின்களுக்கு தங்கையாகவும் நடித்துள்ளார்.

மேலும் மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர்ஹிட் ஆன 'த்ரிஷ்யம் 'படத்திலும் நடித்தார். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் கமலஹாசனுக்கு இரண்டாவது மகளாக நடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது  10ஆம் வகுப்பை நிறைவு செய்துள்ள, எஸ்தர் முதல் முறையாக தமிழில் 'குழலி' என்கிற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார்.

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சேர கலையரசன் என்பவர் இயக்குகிறார், எஸ்தர் இந்த திரைப்படத்தில் குழலி என்கிற 10 வகுப்பு படிக்கும் மாணவியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!