
கர்நாடகாவில் பாகுபலி 2 படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று அங்கிருக்கும் கன்னட வெறியர்கள் போராடினர். அதற்கு காரணம், “சத்யாராஜ் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கன்னடர்களுக்கு எதிராகப் பேசினார்” என்பது மட்டுமே.
அதனால், சத்யராஜ் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் பாகுபலி பாகுபலி படத்தை கர்னாடகத்தில் வெளியிட விடமாட்டோம் என்று அச்சுறுத்தினர்.
தன்னால் படக்குழுவினர் பாதிக்கப்படக்கூடாது என்று சத்யராஜ் வருத்தம் தெரிவித்தார். படமும் வெளியாகி கர்நாடகாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. இன்னும் சொல்ல போனால், தமிழகத்தில் முதல் நாள் வசூலை விட, கர்னாடகத்தில் தான் முதல் நாள் வசூல் அதிகம்.
தமிழகத்திற்காகவும், தமிழர்களுக்காகவும் குரல் கொடுத்த சத்யராஜ் மக்கள் மனதில் எப்போதும் தனித்த இடத்தை பிடித்திருப்பவர்.
அதனால், கர்னாடகாவின் இந்த இழி செயலை தமிழக இளைஞர், மக்கள் என அனைவரும் தமிழருக்கு நடந்த அவமானமாக கருதியுள்ளனர்.
சத்யராஜ் ஒரு தமிழர். தமிழ் உணர்வும், தமிழர் நலனுக்காக குரல் கொடுக்கும் மனித நேயராகவும் கருதிய தமிழக மக்கள். எங்க ஆளு படத்தை கர்னாடாகவுல ரிலீஸ் பண்ண விடமாட்டோம் என்று சத்தப் போட்டிங்கல! இப்போ உங்க ஆளு ரஜினி படம் எந்திரன் 2 படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று முழக்கமிட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, மீறி ரிலீஸ் செய்தால் தமிழக இளைஞர்களும் தமிழ் ராக்கர்ஸ் டீமும் ஆன்லைனில் மட்டுமே இந்தப் படத்தை பார்ப்போம்” என்றும் முடிவெடுத்துள்ளனர்.
கர்னாடகாவுல இருந்து சத்யாராஜ்க்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, தென்னிந்திய திரைப்படச் சங்கம் மௌனம் காத்தது. அட ரஜினி கூட வாயைத் திறக்கல. இதெல்லாம் ஒட்டுமொத்தமாக சேர்ந்து எந்திரன் முதல் பாகத்தில் வரும் பிரம்மாணட ரோபோ மாதிரி உருவெடுத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.