சபர்ணாவை தொடர்ந்து பிரபல நடிகை மர்ம மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்..

Asianet News Tamil  
Published : Nov 14, 2016, 05:46 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
சபர்ணாவை தொடர்ந்து பிரபல நடிகை மர்ம மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்..

சுருக்கம்

பிரபல மலையாள நடிகை ரேகா மோகன் மர்மமான முறையில் தனது வீட்டில் பிணமாக கிடந்தது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ரேகா மோகன். மலையாள சின்னத்திரை உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவரது கணவர் மலேசியாவில் வேலைபார்த்து வருகிறார். தனது மனைவியை 2 நாட்களாக தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததையடுத்து இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து திருச்சூர் மாவட்டம் வைய்யூர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றபோது கதவு திறக்கப்படவில்லை. அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ரேகா மோகன் சடலமாகக் கிடந்தார். பின்னர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பிவைத்தனர். ரேகா மோகன் சந்தேகத்திற்கு இடமான வகையில் பிணமாக காணப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகர் கலாபவன் மணி மரணம் ஏற்படுத்திய சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு சினிமா நட்சத்திரம் மர்மமான முறையில் மறைந்திருப்பது மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எனக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன் - விஜய் பேச்சு
மீச வச்ச குழந்தையாக மாறிய விஜய்... அப்பாவை பார்த்ததும் பாசத்தில் ஓடோடி வந்து கட்டிப்பிடித்த தளபதி - வீடியோ இதோ