
சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற வளர்ந்த நாடுகளை அச்சுறுத்திய கொரோனா வைரஸ், தற்போது வளர்ந்து வரும் நாடான இந்தியாவையும் அச்சுறுத்த துவங்கியுள்ளது.
100க்கும் அதிகமானவர்கள் தமிழகத்தில் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, மக்களை காப்பாற்ற பலரும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகன், லண்டனில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளார். அவர் வந்த விமானத்தில் ஒருவர் கொரோனா தொற்றுடன் பயணித்தது தெரியவந்துள்ளது.
எனவே இந்த விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரையுமே, மருத்துவர்கள் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது நடிகர் சுரேஷ் கோபி... தன்னுடைய மகனை தனிமையில் தங்க வைத்துள்ளார்.
நடிகர் சுரேஷ் கோபியின் மகனுக்கு, கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் அவர் சில நாட்கள் தனிமையில் இருப்பது அவசியம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சுரேஷ் கோபி, தமிழில் நடிகர் சரத்குமாருடன் சமஸ்தானம், அஜித்துடன் தீனா போன்ற படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.