
ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான ரஜினியின் நண்பனாக வரும் மாலிக்கின் மனைவி பூங்கொடி ரோலில் தோன்றி மாஸ் காட்டியிருந்தார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் பதிந்தார். கல்லூரி பேராசிரியராக வரும் மாளவிகா படத்தின் முக்கிய திருப்பதிற்கு காரணமான முக்கிய ரோலில் நடித்திருந்தார். ரொமான்ஸ், டூயட் என எதுவும் இல்லாவிட்டாலும் ரசிகர்களால் -படத்தின் நாயகியாக ஏற்றுக்கொள்ளப்பட்டார் மாளவிகா.
தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில், கவனிக்கப்படும் கதாநாயகியாக வரும் இவர் சமீபத்தில் வெளியான மாறன் படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார். பத்திரிக்கையாளராக வரும் மாளவிகா துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வென்றார். ஓடிஓடியில் வெளியான இந்த படம் போதுமான வரவேற்பை பெறவில்லை.
இதையடுத்து பாலிவுட் பக்கம் திரும்பியுள்ள மாளவிகா யாத்ரா என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது மாளவிகா வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக அவ்வப்போது இளம் நெஞ்சங்களை இம்சிக்கும் விதமாக, குட்டை டவுசர், பிகினி உள்ளிட்ட உடை அணிந்து போஸ் கொடுத்து இளசுகளை இம்சித்து வருகிறார் மாளவிகா மோகனன்.
"எங்கள் சஃபாரி ஏறக்குறைய முடிந்து, அந்தி சாயும் வேளையில், இந்தச் சிறுத்தை ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து இருப்பதைக் கண்டோம்! வானத்தில் வெளிச்சம் ஏறக்குறைய மறைந்துவிட்டது. ஆனால் இந்த அழகான விலங்கின் சில நல்ல காட்சிகளைப் பெற முடிந்தது மற்றும் நல்ல காட்சிகள் என்னை மகிழ்ச்சியடையச் செய்கின்றன! என் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.