ரன்பீர் கபூரின் அடுத்த படத்தில் தளபதி 64 நாயகியா?... வைரலாகும் மாளவிகா மோகன் புகைப்படத்தால் வலுக்கும் சந்தேகம்

Web Team   | Asianet News
Published : Dec 11, 2019, 02:22 PM ISTUpdated : Dec 11, 2019, 03:21 PM IST
ரன்பீர் கபூரின் அடுத்த படத்தில் தளபதி 64 நாயகியா?... வைரலாகும் மாளவிகா மோகன் புகைப்படத்தால் வலுக்கும் சந்தேகம்

சுருக்கம்

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "தளபதி 64" படத்தில், மாளவிகா மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.  அப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாளவிகா மோகன் குறித்து பரபரப்பான தகவல் ஒன்று பரவி வருகிறது. 

பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனின் மகளான மாளவிகா மோகன். கடந்த ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "பேட்ட" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "தளபதி 64" படத்தில், மாளவிகா மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.  அப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாளவிகா மோகன் குறித்து பரபரப்பான தகவல் ஒன்று பரவி வருகிறது. 

விஜய் படத்தில் நடித்து வருவதன் மூலம் தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமாகிவிட்டார் மாளவிகா மோகன். மேலும் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட திட்டம் போட்டுள்ள மாளவிகா, அதற்காக விதவிதமான ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அப்புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் மட்டும் தளபதி பெயரைக் கெடுத்துவிடாதீர்கள் என கதறி வருகின்றனர். மாளவிகாவின் எத்தனையோ கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தாலும், சமீபத்தில் ட்ரெண்டாகி வரும் புகைப்படம் ஒன்று பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. 

இந்தி நடிகர் ரன்பீர் கபூர் உடன் மாளவிகா மோகன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் அது. அப்புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் சமயத்தில், ரன்பீரின் அடுத்த படத்தில் மாளவிகா மோகன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விளம்பர ஷூட்டிங்கிற்காக ரன்பீர் உடன் ஜோடி சேர்ந்த மாளவிகா மோகன், தனது நடிப்பால் அவரை கவர்ந்ததாக கூறப்படுகிறது. எனவே மாளவிகா தான் தனது படத்தின் அடுத்த ஹீரோயின் என ரன்பீர் கபூர் முடிவு செய்துள்ளாராம். இதையடுத்து "தளபதி 64" படத்திற்கு பிறகு ரன்பீர் கபூர் உடன் மாளவிகா மோகன் ஜோடி சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?