
தற்கொலை செய்து கொண்ட கணவரின் குடும்பத்தினர் கொடுத்து வரும் இடையூறுகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக சின்னத்திரை மைனா நந்தினி கூறியுள்ளார்.
சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமான நடிகை நந்தினி, கடந்த ஆண்டு கார்த்திகேயன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும், திருமணமான சில மாதங்களிலேயே அவரை விட்டுபிரிந்து, தமது தந்தையுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட அவரது கணவர் கார்த்திகேயன், நந்தினியின் தந்தை ராஜேந்திரன் தமது தற்கொலைக்கு காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அதன் அடிப்படியில், விருகம்பாக்கம் போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால், அவர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதனால், நந்தினி மற்றும் அவரது குடும்பத்தினர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்று கூறப்படுவதால், அவர்கள் ஜாமீனுக்காக உயர் நீதி மன்றத்தை நாடியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த நந்தினி,
இந்த வழக்கில் முன் ஜாமீன் தேவையில்லை என நீதிபதி கூறிவிட்டார். எனவே, நான் மேல் முறையீடு செய்யப்போவதில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால், எங்கேயும் ஓடி ஒளியப் போவதில்லை.
கடந்த 3 மாதங்களாக நானும் கார்த்தியும் பிரிந்து வாழ்ந்தோம். அப்போதெல்லாம் என்னைப் பற்றி தவறாக பேசாத என் கணவரின் குடும்பத்தினர், தற்போது என்னைப் பற்றி இழிவாக பேசி வருகிறார்கள்.
இதனால் நானும் எனது குடும்பத்தினரும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனது கணவனை கூட பார்க்க அவர்கள் விடவில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு இடுகாட்டில்தான் அவரின் முகத்தைப் பார்த்தேன்.
எல்லோரிடமும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. மன உளைச்சலில் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார். தற்போது நானும் மன உளைச்சலில் சிக்கி தவிக்கிறேன். நானும் தற்கொலை செய்து கொள்ளட்டுமா?.
என்னை நம்பி எனது தாய், தந்தை, தம்பி இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு குழந்தை போன்றவர்கள். அவர்களை காப்பாற்ற நான் உயிர் வாழ வேண்டும்.
அவர்களுக்கென்று செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்த பின்னரே, நான் நிம்மதியாக கண் மூடுவேன் என்று கண்ணீர் மல்க நந்தினி கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.