
கீ பட இசை வெளியீட்டு விழா:
அறிமுக இயக்குனர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ரானி நடிக்கும் படம் கீ. இந்த படத்தை மைக்கேல்ராயப்பன் தயாரிக்கிறார். இப்படத்திற்கான ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகருமான விஷால், விஜய் சேதுபதி, ஜீவா, நிக்கி கல்ரானி, தயாரிப்பாளர்கள் மைக்கேல் ராயப்பன்,தேனப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் பேசிய வல்லவன் பட தயாரிப்பாளர் தேனப்பன், சிம்பு மீது மைக்கேல்ராயப்பன் புகார் கொடுத்தும் ஏன் விஷால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கூட்டத்தில் இருந்த வின்னர் தயாரிப்பாளர் ராமச்சந்திரன் பொது இடத்தில் இப்படி பேசக்கூடாது என கூச்சலிட்டார். இதனால் அவரை அங்கிருந்து வெளியேற்றினர்.
விஜய் சேதுபதி பேச்சு:
அதன்பிறகு பேசிய விஜய்சேதுபதி படம் ஓடினால்தான் நமக்கு பவர். இல்லன்னா எவனும் சீண்ட மாட்டான், நாம நக்கிட்டுத்தான் போகணும் என்று ஆவேசமாக பேசினார்.
ஆதிக் ரவிச்சந்திரன் முடிவு:
அதன் பிறகு பேசிய விஷால், சிம்புவால் பாதிக்கப்பட்ட மைக்கேல் ராயப்பனுக்கு ஒரு பைசா கூட வாங்காமல் படம் பண்ணி
தருவதாக வாக்கு கொடுத்தார். இந்நிலையில் மைக்கேல்ராயப்பன் தயாரிப்பில் விஷால் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருப்பது ஆதிக் ரவிச்சந்திரன்தான் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடல்ட் காமெடி படமான ”திரிஷா இல்லனா நயன்தாரா” படம் மூலம் அறிமுகமானவர்தான் ஆதிக் ரவிச்சந்திரன்.
யாரிடமும் உதவி இயக்குநராக சேராமல், நேரடியாக இயக்குநர் ஆனவர் ஆதிக். திரிஷா இல்லன்னா நயன்தாரா படம்
நன்றாக ஓடியதால் அடுத்து சிம்புவை வைத்து ”ஏஏஏ” படத்தை இயக்கினார். அந்த படம் படுதோல்வி அடைந்தது.
படம் சரியாக போகாததற்கு சிம்புதான் காரணம் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும், தயாரிப்பாளர் மைக்கேல்ராயப்பனும்
பிரஸ் மீட் வைத்து குற்றம்சாட்டினர். இது பற்றிதான் ”கீ” ஆடியோ ரிலீஸ் விழாவில், தேனப்பன் விஷாலிடம் கேள்வி எழுப்பினார்.
பழிக்கு பழியா:
தற்போது மைக்கேல்ராயப்பனே விஷாலுடன், ஆதிக்கை கோர்த்து விட்டிருப்பதால் பழிக்குப் பழியாக இருக்குமோ என்று
கிசுகிசுக்கின்றனர் கோலிவுட் வாசிகள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.