காதில் கடுக்கன்... சால்ட் அண்ட் பெப்பர் லுக்... கைல சுருட்டு... ஏரியா தல அப்புறம் யூனிவர்சல் டான்!

 
Published : Jan 21, 2018, 12:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
காதில் கடுக்கன்... சால்ட் அண்ட் பெப்பர் லுக்... கைல சுருட்டு... ஏரியா தல அப்புறம் யூனிவர்சல் டான்!

சுருக்கம்

Leaked of Vijays look and story Thalapathy62

துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக இயக்குனர்  ஏ.ஆர்.முருகதாஸூடன் தளபதி62 படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இந்த படத்திற்கு பூஜை போட்ட மாதிரி இருக்கும் ஒரு புகைப்படம் இன்று வெளியாகி ட்ரெண்ட் ஆனது. மெர்சல் படத்திற்குப்பின்  தளபதி விஜய் மீண்டும்  திரையில் பார்த்த விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்த போட்டோவில் விஜய் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் உள்ளார். மேலும், காதில் ஸ்டெட் அணிந்துள்ளார். இந்த போட்டோவில் கெத்தாக தெரிகிறார் விஜய். தன்னுடைய இடது காதில் கடுக்கண் அணிந்துள்ளது  விஜய்யின் புதிய ஸ்டைலா? அல்லது படத்தின் கதாபாத்திற்காக கடுக்கண் அணிந்துள்ளாரா? என்பது போகப்போகத் தெரியும்.

காதில் கடுக்கன் சால்ட் அண்ட் பேப்பர் லூகில் தளபபதியை பார்த்தால் படத்தில் இந்த கேரக்டர் நெகட்டிவ் ரோல் கொண்டதாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. சமீபத்தில் வெளியான போட்டோசூட் வீடியோ மற்றும் போட்டோவை வைத்து பார்க்கும்போது, அதே கேரக்டரில் உள்ள விஜய்தான் இந்த விஜய் எனவும் தெரிறது. கத்தியை போல இதிலும் இரண்டு விஜய் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

விவசாயம்:

இப்படத்தின் கதை விவசாயம் பற்றியும், விவசாயிகள் படும் கஷ்டத்தை அரசாங்கத்துக்கு எடுத்துக் கூறும் படமாக தயாராக இருக்கிறதாம். மேலும் படத்தில் பாலிவுட் நாயகி ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இரட்டை வேடம்:

அழகிய தமிழ்மகன் படத்தை அடுத்து விஜய் இரட்டை நாயகன் மற்றும் வில்லன் வேடங்களில் நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இதில், ஒருவர் விவசாயியாகவும், மற்றொருவர் மாற்றுத்திறனாளியாகவும் நடிப்பதாக கூறப்பட்டது.



கீர்த்தி சுரேஷ்:

பைரவா படத்தைத் தொடர்ந்து தளபதி 62வது படத்திலும் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் வில்லன் விஜய்க்கு பாலிவுட் நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாக தெரிகிறது. இப்படம் சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி இப்படத்தின் கதை இருப்பதாக தெரிகிறது.



ஆஸ்கர்நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்:

உதயா, அழகிய தமிழ் மகன், மெர்சல் படத்தைத் தொடர்ந்து தளபதி 62வது படத்திற்கும் இசைப்புயல், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்தில் இசையமைக்கிறார். மெர்சலில் பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம்:

வேட்டைக்காரன், சுறா படங்களை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய்யின் 62வது படத்தை தயாரிக்கிறது.

தீபாவளி ரிலீஸ்:

கடந்த ஆண்டு தீபாவளியண்டு அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் செம ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து தற்போது உருவாகி வரும் தளபதி 62 படமும் தீபாவளிக்கு வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



பாக்ஸ் ஆபிஸ்:

ஏற்கனவே துப்பாக்கி, கத்தி என தளபதி விஜய்யை வேறு லெவலுக்கு எடுத்து சென்ற ஏ.ஆர்.முருகதாஸ் பாக்ஸ் ஆபிஸ் பட்டையை கிளப்பியது. அந்த வகையில், தளபதி 62வது படமும் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?