
தென்னிந்திய திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தரப்படுகிறது! என்று அதிர்ச்சி பட்டாசை பற்ற வைத்த நடிகை ஸ்ருதி ஹரிஹரன் ஐதராபாத்தில் வைத்து மீண்டும் அந்த விஷயத்தை அழுத்திப் பேசியிருக்கிறார்.
ஸ்ருதி பேச்சின் ஹைலைட்ஸ்கள்...
* வாய்ப்பு வேண்டுமென்றால் தங்களை ‘அட்ஜஸ்ட்’ செய்யும்படி, நடிகைகளை இயக்குநர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.
* தமிழ் மற்றும் கன்னடத்தில் அப்படியான தொல்லைகளை நான் அனுபவித்தேன்.
* படப்பிடிப்பு மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்களில் பெண்களின் உடலை, விற்பனை பொருள் போல் பார்க்கின்றனர்.
* முதல் படத்திலேயே எனக்கு தொல்லை ஏற்பட்டது. படப்பிடிப்பின் போதே எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து அநாகரிகமாக நடந்து கொண்டனர்.
* தமிழ் திரைப்படம் ஒன்றில் வாய்ப்பு கிடைத்தது. படம் பற்றி பேச அழைத்த தயாரிப்பாளர் ‘ நாங்கள் ஐந்து நண்பர்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறோம். உன்னையும் பயன்படுத்திக் கொள்ள நீ சம்மதிக்க வேண்டும்’ என்றனர். அதற்கு நான் ‘எப்போதும் செருப்பை என் கையில் வைத்து நடமாடுவேன். சீண்டினால் வேறு மாதிரி ஆகிவிடும்.’ என்றேன். அதன் பின் எனக்கு தமிழ் படங்களில் வாய்ப்பு குறைந்தது.
* கன்னட படம் ஒன்றின் படப்பிடிப்பிலும் இயக்குநர் ஒருவர் என்னிட தகாத முறையில் நடந்து கொண்டார்.
- என போட்டுப் பொளந்திருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.