ஹன்ஷிகாவுக்கு காவி உடைக்குப் பதில் பர்தா... வாண்டட் ஆக வம்பு வளர்க்கும் டைரக்டர்...

By vinoth kumarFirst Published Dec 26, 2018, 12:40 PM IST
Highlights


இந்நிலையில் நேற்று கிறிஸ்மஸ் வாழ்த்துச்சொல்லும் அப்பட போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ஹன்ஷிகா இஸ்லாமிய உடையான புர்கா அணிந்தபடி தொழுதுகொண்டிருந்தார். பின்னால் இன்னோர் ஹன்ஷிகா துப்பாக்கியால் யாரையோ சுட்டுக்கொண்டிருந்தார்.

பிச்சைப் பாத்திரத்துக்குப் பதில், ’சர்ச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே’ என்று தன் பட போஸ்டர்களால் வாண்டட் ஆக வலைதளவாசிகளிடம் வம்பிழுத்து வருகிறார் ஒரு புதுமுக இயக்குநர்.

ஜமீல் என்னும் புதுமுக இயக்குநர் எட்செட்ரா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகை ஹன்ஷிகா மோத்வானியை நாயகியாகக் கொண்டு ‘மஹா’ என்ற படத்தை இயக்கிவருகிறார். புனித ஸ்தலம் ஒன்றில் காவி உடையில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு ஹன்ஷிகா கஞ்சா புகைத்த இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகின.

போஸ்டர் குறித்து கமெண்ட் அடித்த பலரும் இதே ஹன்ஷிகாவை பர்தாவில் நீ இப்படிக் காட்டமுடியுமா? இந்து மதம் என்பதால்தானே அவ்வளவு சுலபமாய் கிண்டலடிக்கிறாய்’ என்று கமெண்ட் அடித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று கிறிஸ்மஸ் வாழ்த்துச்சொல்லும் அப்பட போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ஹன்ஷிகா இஸ்லாமிய உடையான புர்கா அணிந்தபடி தொழுதுகொண்டிருந்தார். பின்னால் இன்னோர் ஹன்ஷிகா துப்பாக்கியால் யாரையோ சுட்டுக்கொண்டிருந்தார்.

இந்த போஸ்டர் மக்களை திருப்திப்படுத்தவில்லை. காவி உடையில் இருந்தால் தம் அடிப்பார். இஸ்லாமிய உடையில் இருந்தால் தொழுவாரா? சந்தேகமில்லாமல் நீ ஒரு இஸ்லாமிய மதவெறியன்தான்’ என்று ஜமீல் மீது இன்னும் கடும்கோபத்துக்கு ஆளாகிவிட்டார்கள் இந்துமத ஆதரவாளர்கள்.

click me!