'தோழிகளுடன் சமைங்க சிங்கப்பூருக்கு பறங்க' மகளிர் மட்டும் குழுவினரின் அடுத்த அதிரடி !

 
Published : Sep 22, 2017, 01:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
'தோழிகளுடன் சமைங்க சிங்கப்பூருக்கு பறங்க' மகளிர் மட்டும் குழுவினரின் அடுத்த அதிரடி !

சுருக்கம்

magalir mattum screw announce fly to singapore contest for ladies

பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, பானுப்பிரியா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் 'மகளிர் மட்டும்'. கடந்த வாரம் வெளியான இப்படத்திற்கு  ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக பெண்கள் மத்தியில் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் திளைத்து வருகிறது.

இந்த நிலையில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பெண்களுக்கான போட்டி ஒன்றை படக்குழு அறிவித்துள்ளது. இதில் வெற்றி பெறும் பெண்கள் தங்களது தோழிகளுடன் இணைந்து சிங்கப்பூருக்கு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி பெண்கள் தங்களது 2 பழைய தோழிகளை தேர்ந்தெடுத்து அவர்களுடன் இணைந்து, சக்தி மசாலாவை வைத்து ரெசிபி ஒன்றை செய்ய வேண்டும். தங்களது சமையல் அனுபவங்களை எழுதி, அத்துடன் தங்களது செல்பி ஒன்றையும் இணைத்து படக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

இதுதவிர தாங்கள் சமைத்த ரெசிபியுடனும் செல்பி எடுத்து அனுப்ப வேண்டும். 1௦௦ வார்த்தைகளுக்கு மிகாமல் தங்களது அனுபவத்தை எழுதி MMSATHIMASALA@GMAIL.COM என்ற மெயில் ஐடிக்கு அனுப்பலாம்.அல்லது 7558752140 என்ற எண்ணுக்கு வாட்ஸ்ஆப் செய்யலாம்.

ஒவ்வொரு குழுவிலும் 3 பெண்கள் உட்பட சுமார் 3௦ பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பு வழங்கப்படும்.இவ்வாறு 'மகளிர் மட்டும்' படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக தியேட்டரில் 'மகளிர் மட்டும்' படம் பார்த்த பெண்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பட்டுப்புடவை பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

key words: magalir mattum, jyothika, suriya, singapore, மகளிர் மட்டும், ஜோதிகா, சூர்யா, சிங்கப்பூர்
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!