
சமீப காலமாக பிரபலங்களின் சமூக வலைத்தளம் ஹக் செய்யப்பட்டு அவர்களை ஷாக்காக்கி வருகிறது. அதிலும் பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் செய்யப்படும் பதிவுகளால் கோலிவுட் பிரபலங்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த பிரச்சனையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இன்னொரு பிரபல நடிகையின் சமூகவலைத்தள கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
'பிரேமம்' என்ற மலையாள வெற்றி படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் 'காதலும் கடந்து போகும்' உள்ளிட்ட ஒருசில படங்கள் நடித்த மடோனா செபாஸ்டின் சமூக வலைத்தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாம்.
என்னுடைய ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. எனவே அதில் ஏதாவது கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டால் அது என்னுடையது அல்ல. அதேபோல் எனது டுவிட்டர் கணக்கிலும் வரும் பதிவுகளுக்கு நான் பொறுப்பல்ல' என்று மடோனா கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.