ஜட்டி போட்டுட்டு சுத்திட்டு இருந்த நீ பேசலாமா? சாக்‌ஷியை கேவலமாக கிழிக்கும் மதுமிதா!!

Published : Sep 09, 2019, 04:54 PM IST
ஜட்டி போட்டுட்டு சுத்திட்டு இருந்த நீ பேசலாமா? சாக்‌ஷியை கேவலமாக கிழிக்கும் மதுமிதா!!

சுருக்கம்

நானாவது கவுன் போட்டுட்டு சுத்தினேன், இது ஜட்டி போட்டுட்டு சுத்துச்சி என்று சாக்‌ஷியை கேவலமாக கிழித்துள்ளார்.

பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கும் விருந்தாளியாக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வனிதாவிற்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, உள் இருந்த 8 பேரிடமும் சண்டை நடந்து தமிழ் பெண் தமிழ் பெண் என ஓவர் பில்டப் விட்டு கத்தியால் கையைக் கிழித்து டிராமா போட்ட நிலையில் மதுமிதா வெளியேற்றப்பட்டார்.

வெளியேறிய நான்கு வாரங்களுக்குள் பல டிராமா போட்டு பேமெண்ட் வாங்கிய அடுத்த நாளே, பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் மீது போலீசில் புகார் கொடுத்துவிட்டு, இணையதளங்களுக்கு பேட்டி கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

அவர் கொடுத்துவரும் பேட்டியில் தமிழ் பெண், தமிழ் பெண் என வார்த்தைக்கு வார்த்தை புலம்பி வருகிறார்.   கமல் சார் நியூஸ் வாசிக்க சொன்னப்போ, அப்போ அபிராமி பெருமையா இந்த கொழந்த முகேன்க்கும் பொறந்ததுன்னு சொன்னாங்க, அப்போ என் தமிழ் மக்கள் பார்க்கிறாங்கன்னு அப்போ நான் பேசினேன். அதில்  அப்போ, பாருங்க இதை நான் சொல்லும்போது அத்தனை பேரும் சுத்தி சுத்தி என்னை கேள்வி கேட்டாங்க, சாக்க்ஷி என்கிட்ட கேட்குது, தமிழ் பொண்ணுன்னு சொல்லிட்டு பிராக் போட்டுட்டு சுத்திட்டு இருக்கன்னு, நான் கேட்டிருப்பேன் நானாவது கவுன் போட்டுட்டு சுத்தினேன், இது ஜட்டி போட்டுட்டு சுத்துச்சி என்று ஷாக்ஷியை கேவலமாக கிழித்துள்ளார்.

அடுத்ததாக அபிராமியின் தோழி ஷெரின் மதுமிதாவிடம் என்ன நீ எப்போ பார்த்தாலும் தமிழ் பொண்ணு தமிழ் பொண்ணுன்னு சொல்ற? என கேள்வி கேட்டதற்கு, தமிழ் பொண்ணுன்னு சொல்றதுக்கு கோபப்படுறியே, நீதான் அந்த பொண்ணு கூட இருக்க, அந்த பொண்ணோட நடவடிக்கை தவறா இருக்கு, நாலுநாள் லவ் வருது, அஞ்சாவது நாள் குழந்தை பிறக்குது, தப்பு என்னும்போது கேட்க்காமல் அவளை உற்சாகப்படுத்தும் உன்னை என்னன்னு சொல்றது என ஷெரினையும் தாறுமாறாக விமர்சித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி