உன் பொண்ணு, கூட படிக்கிற பையனுக்கும் எனக்கும் குழந்தை பொறந்துச்சுன்னு சொன்னா என்ன பண்ணுவ? வனிதாவை கீழ்த்தரமாக பேசும் மதுமிதா

Published : Sep 09, 2019, 03:57 PM ISTUpdated : Sep 09, 2019, 04:09 PM IST
உன் பொண்ணு, கூட படிக்கிற பையனுக்கும் எனக்கும் குழந்தை பொறந்துச்சுன்னு சொன்னா என்ன பண்ணுவ? வனிதாவை கீழ்த்தரமாக பேசும் மதுமிதா

சுருக்கம்

தமிழ் பெண் தமிழ் பெண் என்று தமிழக மக்களிடம் ஓட்டுக்காக சென்டிமென்ட்டாக பேசிவந்த மதுமிதா, அபிராமி கேரக்டர் பற்றி கீழ்த்தரமாக பேசியுள்ளார். அதுமட்டுமல்ல வனிதாவின் இரண்டு பெண் பிள்ளைகளையும் கேவலமாகவும் கீழ்தரமாகவும் பேசியுள்ளார் மதுமிதா.  

தமிழ் பெண் தமிழ் பெண் என்று தமிழக மக்களிடம் ஓட்டுக்காக சென்டிமென்ட்டாக பேசிவந்த மதுமிதா, அபிராமி கேரக்டர் பற்றி கீழ்த்தரமாக பேசியுள்ளார். அதுமட்டுமல்ல வனிதாவின் இரண்டு பெண் பிள்ளைகளையும் கேவலமாகவும் கீழ்தரமாகவும் பேசியுள்ளார் மதுமிதா.

பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் இருந்த காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கும் விருந்தாளியாக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வனிதாவிற்குமிடையே வாக்குவாதம் முற்றி, மதுமிதா கத்தியால் கையைக் கிழிக்கும் அளவுக்குப் போனது. மதுமிதா வெளியேற்றப்பட்டார்.

தனக்கு சேரவேண்டிய பேமெண்ட் கைக்கு வாங்கிய நிலையில் சுமார் 4 வாரத்திற்குப் பின் முதல்முறையாக வாய் திறந்த மதுமிதா, பிக் பாஸ் வீட்டில் நடந்த பல விவரங்களை தற்போது தனியார் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அதில்; தமிழ் பெண், தமிழ் பெண் என்று நீங்கள் மக்களின் சென்டிமென்ட்க்குக்காக பேசியதாக சொல்கிறார்களே என்ற கேள்வி பதிலளித்த அவர், அங்கே உள்ளே பல ஆண்கள் இருக்கிறார்கள், வெளியே பல ஆண்கள் பார்க்கிறார்கள் என்று கூட உணர்வு இல்லாமல், உள்ளாடை அணியாமல் கூட அப்படியே சுத்திக்கொண்டிருந்தாள். அதையும் காட்டினார்கள், நான்காவது நாள் இப்படி சுற்றிக்கொண்டிருக்கும்போது எனக்கும் வனிதாவுக்கு ஷாக்,  இதை நாங்க அந்த பெண்ணிடம் கண்டிக்கிறோம், ஆனால் அது சரியாகல, தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருந்தது.

உள்ளே போன மறுநாளே இந்த பொண்ணுக்கு கவின் மேல காதல் வந்துச்சி, அடுத்தது கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் போதும் என பேசினாங்க, கவின் முடியாதுன்னு ரிஜக்ட் பண்ணதுக்கு அப்புறம், அடுத்தநாள் அந்த லவ் முகேன் மீது வந்துடுச்சி,  ஆறாவது நாள் அவங்களுக்கு குழந்தை பிறக்குது, இதெல்லாம் எனக்கு டிஸ்ட்ரப் ஆகுது.

இது பற்றி சரவணன் சார்கிட்ட பேசினேன், அப்போ எதிர்பார்க்காத நேரத்துல கமல் சார் நியூஸ் வாசிக்க சொல்றாரு, அப்போ இந்த அம்மா (அபிராமி) பெருமையா இந்த கொழந்த முகேன்க்கும் பொறந்ததுன்னு சொல்லிடுங்கன்னு ஒரு வார்த்தை பயன்படுத்தினாங்க, சொல்லும்போது நான் சொல்லாதீங்க இது தப்புன்னு சொல்லிட்டேன். அப்போ வனிதாகிட்ட என்ன மேடம் இது இந்த பொண்ணு உள்ளாடை கூட போடாம சுத்திகிட்டு இருக்கா, என் தமிழ் மக்கள் பார்க்கிறாங்கன்னு அப்போ நான் பேசினேன்.

அப்போ, பாருங்க இதை நான் சொல்லும்போது அத்தனை பேரும் சுத்தி சுத்தி என்னை கேள்வி கேட்டாங்க, சாக்க்ஷி என்கிட்ட கேட்குது தமிழ் பொண்ணுன்னு சொல்லிட்டு பிராக் போட்டுட்டு சுத்திட்டு இருக்கன்னு, நான் கேட்டிருப்பேன் நானாவது கவுன் போட்டுட்டு சுத்தினேன், இது ஜட்டி போட்டுட்டு சுத்துச்சி என்று ஷாக்ஷியை கிழித்துள்ளார்.

வனிதா கேட்டுச்சி, பாட்டில் பேபியை நீ எப்படி குறை  சொல்லுவன்னு, ரெண்டு பெண் குழந்தைகளுக்கு தாய் தானே நீ? ஸ்கூலுக்கு வாட்டர் பாட்டிலோடு போயி வரும்போது, வாட்டர் பாட்டிலில் டயப்பர் கட்டிக்கிட்டு வந்து, அம்மா இந்த குழந்தை என்னோட கிளாஸ் ரூமில் இருக்கும் ஒரு பையனுக்கும் பொறந்ததுன்னு சொன்னா பெயர் சூட்டு விழா நடத்துவியா? என்று வனிதாவின் பெண் குழந்தைகளை கேவலமாக பேசியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி