7 வருடத்திற்கு பின் இரண்டாவது பட அறிவிப்பை வெளியிட்ட மதயானை கூட்டம் இயக்குனர்!

Published : Feb 21, 2020, 05:02 PM IST
7 வருடத்திற்கு பின் இரண்டாவது பட அறிவிப்பை வெளியிட்ட மதயானை கூட்டம் இயக்குனர்!

சுருக்கம்

மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக தென்தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவுமுறைகளை மிக அழுத்தமாக பதிவு செய்து தமிழ்திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இந்த படத்தில், கதாநாயகனாக நடிகர் கதிர் நடித்திருந்தார். நாயகியாக நடிகை ஓவியா நடித்திருந்தார். மேலும் கலையரசன், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.  

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையிலும், இரண்டாவது படத்தை இயக்க தாமதமானது. இந்நிலையில் 7 வருடத்திற்கு பின் இவர் இயக்க உள்ள "தேரும் போரும்" படத்தின் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் கதாநாயகனாக அட்டக்கத்தியில் அறிமுகமாகி  குக்கூ,விசாரணை இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் தான் நடித்த தினேஷ் நடிக்கிறார்.

மைனா,கும்கி, பைரவா,ஸ்கெட்ச் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் கலை இயக்குனராவும் லாரன்ஸ் கிஷோர் எடிட்டராகவும் பணியாற்றுகிறனர். 

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடலாசிரியர் ஏகாதசி எழுதி அனைத்து பாடல்களும் பதிவு செய்யப்பட்டுவிட்டது. மிகுந்த பொருட்செலவில் முன்னனி தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் நடிக்கும்  “தேரும் போரும்” படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் முதல்வாரத்தில் சிவகங்கை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில்  துவங்க உள்ளது. "தேரும் போரும்" திரைப்படத்தை வில்அம்பு, கென்னடி கிளப் படங்களை தயாரித்த தாய் சரவணனின் நல்லுசாமி பிக்ஸர்'ஸ் சார்பாக  நடிகர் அருள்தாஸ் மற்றும் கார்த்திக்துரை இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்குகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஓவர் குஷியில் உண்மையை உலறிய ரோகிணி... கிரிஷின் அப்பாவாக மாறிய மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்
கதிர் - ஞானம் இடையே சண்டையை மூட்டிவிட்ட அறிவுக்கரசி.. பிரியும் ஆதி குணசேகரன் ஃபேமிலி - எதிர்நீச்சல் தொடர்கிறது