மாநாடு தந்த மவுசால், இனி வில்லன் வேடங்களில் நடிப்பதென முடிவெடுத்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. அந்த வகையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘மார்க் ஆண்டனி’ என்கிற படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
குஷி, வாலி, போன்ற சிறந்த படங்களை இயக்கி தன்னை ஒரு இயக்குனராக நிரூபித்து காட்டிய எஸ்.ஜே.சூர்யா, நியூ, நண்பன், இறைவி போன்ற படங்களில் திறம்பட நடித்து, தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுக்கடுக்காக பல படங்களின் நடிக்க வாய்ப்பு தேடி வந்ததால் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரெஸ்ட் விட்டார்.
அதுவரை ஹீரோவாகவும், காமெடி வேடங்களிலும் நடித்து வந்த எஸ்.ஜே.சூர்யாவை, வில்லனாக்கி அழகு பார்த்தார் ஏ.ஆர்.முருகதாஸ். மகேஷ் பாபு என்கிற மிகப்பெரிய நடிகர் அப்படத்தில் நடித்திருந்த போது, எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு தனித்து நின்றது. காரணம் அவரது வில்லத்தனம் தான். 'ஸ்பைடர்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வெறித்தனமாக வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இதையடுத்து அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து அசத்தினார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் தனுஷ்கோடி என்கிற வில்லன் கதாபாத்திரத்தை தனக்கெ உரித்தான நக்கல் நையாண்டியுடன் நடித்து மெருகேற்றி இருந்தார். சிம்புவைப் போல் இவரது கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
மாநாடு தந்த மவுசால், இனி வில்லன் வேடங்களில் நடிப்பதென முடிவெடுத்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. அந்த வகையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘மார்க் ஆண்டனி’ என்கிற படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக அவர் நடிக்க உள்ளார். இப்படத்திற்காக அவர் 5 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஹீரோவாக நடிப்பதற்கு கூட இவ்வளவு வாங்காதவர், வில்லன் வேடம் என்றால் கோடிகளில் தான் டீல் பேசுகிறாராம்.