பாடலாசிரியர் மேத்தாவின் மனைவி காலமானார்!

 
Published : Oct 21, 2017, 07:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
பாடலாசிரியர் மேத்தாவின் மனைவி காலமானார்!

சுருக்கம்

lyricsist metha wife pass away

கவிஞரும் பாடலாசிரியருமான முகமத் மேத்தாவின் மனைவி சையது ராபியா என்கிற மல்லிகா மேத்தா, இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருக்கு வயது 62 . 

அவரது உடல், சென்னை பெசண்ட் நகர் கலாக்ஷேத்திரா காலனி, ராஜராஜன் தெருவில் இருக்கும் மு.மேத்தாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. கவிஞர்களும், பாடலாசிரியர்களும், இலக்கியவாதிகளும் மல்லிகா மேத்தா உடலுக்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரது உடல் நாளை கொட்டிவாக்கத்தில் உள்ள கபர்ஸ்தானில் அடக்கம் செய்யப்படுகிறது. 

கவிஞர் மு மேத்தாவின் புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பான கண்ணீர் பூக்கள் வெளியானதில் மல்லிகா மேத்தாவின் பங்கும் உண்டு. அதை கவிஞர் மேத்தா இப்படிக் குறிப்பிட்டிருந்தார் ஒரு கவிதையில் ...

கண்ணகி கால் சிலம்பைக் கழற்றினாள்

மாணவர்கள் சிலப்பதிகாரம் படித்தார்கள்

என் மனைவி கைவளையல் கழற்றினாள்

நீங்கள் கண்ணீர் பூக்கள் படிக்கிறீர்கள்! 

வாழ்க்கைத்துணைவியாக இருந்து வாழ்க்கையில் மட்டும் பங்கு எடுத்துக்கொள்ளாமல், கவிஞர் மேத்தாவின் கனவையும் நனவாக்கிய இவரை இழந்து வாடும் இவரது குடும்பத்துக்கு  நம் ஆழ்ந்த அனுதாபங்கள்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!