
தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞருமான காமகோடியன் இன்று காலமானார். தமிழ் திரையுலகில் 1980களில் பிரபலமாக இருந்த பல சூப்பர் ஹிட் பாடல்கள் கவிஞர் காமகோடியன் எழுதியது தான்.
இவர் எம்.எஸ்.விசுவநாதன், இளையராஜா, தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா என 3 தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை எழுதி புகழ்பெற்றார். குறிப்பாக கடந்த 2002 ல் சூர்யா நடித்த மெளனம் பேசியதே படத்தில், இவர் எழுதி வெளியான ‘௭ன் அன்பே ௭ன் அன்பே பாடல்’ இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவர் கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திருட்டு ரயில் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதினார். அதன்பின் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த காமகோடியன், இன்று காலமானார். அவருக்கு வயது 76.
கவிஞர் காமகோடியனின் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.