
முன்பெல்லாம் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர்களுக்குத் தான் ரசிகர்கள் அதிகமாக இருப்பார்கள். ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. சின்னத்திரை சீரியல் நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொகுப்பாளினிகளுக்கும் தற்போது அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
அந்த வகையில் பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி மணிமேகலையைத் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பு இல்லை. இவர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
தற்போது இவர் ஒருவரைக் காதலித்து வருவதாகவும், இவருடைய காதலுக்கு அவருடைய பெற்றோர்கள் சம்மதிக்க மறுத்து, ஒரு நிலையில் அது அடிதடியாக மாறி மணிமேகலை தாக்கப்பட்டார் என்கிற தகவலும் வெளியானது. இதன் காரணமாக இவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் செய்திகள் உலா வந்தன.
ஆனால், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை , இப்படிப் பரவிய செய்திகள் அனைத்தும் பொய் என்றும், நான் காதலித்து வருவது உண்மை தான், அதற்கு என் குடும்பத்தில் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதும் உண்மை. அதனால் மோதல் இருக்கின்றது , இருப்பினும் என் பெற்றோர்கள், சகோதரர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்’ என்று கூறியுள்ளார் மணிமேகலை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.