
Love Marriage Story : கும்கி படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் வாரிசு நடிகர் விக்ரம் பிரபு. இந்தப் படம் மட்டுமின்றி படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடிக்கும் படங்கள் பெரிய அளவிற்கு வரவேற்பு கொடுப்பதில்லை. இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வாகா, வீர சிவாஜி, பக்கா, அசுரகுரு, ரெய்டு என்று பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், எந்தப் படமும் நினைத்தது மாதிரி கை கொடுக்கவில்லை. தற்போது இவருடைய நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் தான் லவ் மேரேஜ்.
இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். சத்யராஜ் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ரொமாண்டிக் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி நாட்டில் நடக்கும் எதார்த்தமான உண்மை கதையை இந்தப் படம் எடுத்துரைக்கிறது.
ஆம், இன்றை காலகட்டத்தில் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆனால், என்னடானா 2கே கிட்ஸ்களுக்கு உடனே திருமணாகிவிடுகிறது. எங்கு சென்று ஜாதகம் பார்த்தாலும் 35 வயதுக்கு மேல், 40 வ்யதுக்கு மேல் தான் திருமணம் நடக்கும் என்று சொல்கிறார்கள். இன்னும் ஒரு சில இடங்களில் அவர்களே பரிதாபம் கொள்ளும் நிலை கூட ஏற்படுகிறது. அப்படி ஒரு கதையை மையப்படுத்திய படம் தான் லவ் மேரேஜ். இப்படியொரு கதையில் விக்ரம் பிரபு நடித்ததில்லை என்று சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறும் என்று தெரிகிறது. திருமணம் தாமதமாக நடக்கும் ஒரு கதையை மையமாக வைத்து சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை இந்தப் படம் வெளிச்சம் போட்டு காட்டும். ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். யு சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது. சிறிய பட்ஜெட் படம் என்பதால் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறும் என்று தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.