
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் நாளுக்கு நாள், ஒவ்வொரு பிரச்சனைகளும் போட்டியாளர்களுக்குள் சூடு பிடிக்க துவங்கி விட்டது. அப்படியே அவர்கள் அழ வில்லை என்றாலும், அவர்களுடைய சோக கதையை கூற வைத்து, பிக்பாஸ்சே அவர்களை அழ வைத்து விடுகிறார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்டுள்ள அபிராமி,சாக்சி, வனிதா, மீரா மிதுன் உள்ளிட்ட பிரபலங்கள், அழுகை ,காதல் உள்பட சில விஷயங்களை முன்வைத்து ரசிகர் மனதை கவர முயற்சி செய்து வருகிறார்கள்.
ஆனால், யார் என்ன செய்தாலும் அதை பற்றி சற்றும் கண்டு கொள்ளாமல், போலித்தனமாக நடிக்காமல் , இருக்கும் இடம் கூட தெரியாமல் இருந்து வருகிறார் இலங்கை பெண் லாஸ்லியா.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான, 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் இடம்பெற்ற "கண்ணம்மா உன்ன மனசு நினைக்குது பார்வை பாரடி, என்கிற பாடலை பாடினார். இந்த விடியோவை லாஸ்லியா ஆர்மியை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் சிலர் அவர் பாடிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.
ரசிகர் ஒருவர் இந்த வீடியோவை ஹரிஷ் கல்யாணுடன், லாஸ்லியாவை இணைத்து எடிட் செய்துள்ளனர் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் சுட்டிக்காட்டிய நடிகர் ஹரிஷ் கல்யாண், 'லாஸ்லியா பலருடைய இதயங்களை வென்றுவிட்டார். 'கண்ணம்மா' பாடலை அவர் பாடியதை கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வீடியோவை எடிட் செய்தவருக்கும் நன்றி' என்று தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோ இதோ:
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.