
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம், எதிர்பாராத பல சண்டை, பிரச்சனைகள் நடந்தது. குறிப்பாக வனிதா, ஷெரினையும் - தர்ஷனையும் வைத்து அசிங்கமாக பேசியது, மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது.
அதை விட இன்று வெளியாகியுள்ள, ப்ரோமோவில்... லாஸ்லியாவை திட்டம் போட்டு அசிங்கப்படுத்தும் விதமாக, நடுவராக இருக்கும்... மோகன் வைத்தியா, மற்றும் சாக்ஷி, இருவரும் லாஸ்லியாவிற்கு பச்சோந்தி என பட்டம் கொடுக்கிறார்கள்.
இந்த பட்டத்தை பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் சாக்ஷி நடுவராக இருந்து வழங்குகிறார். தனக்கு கொடுத்த பட்டத்தை, தூக்கி எரிந்து விட்டு அந்த இடத்தை விட்டு செல்கிறார் லாஸ்லியா.
லாஸ்லியாவின் இந்த செயலை கண்டதும், இதை இங்கு தூக்கி எரிய கூடாது, வெளியில் சென்று தூக்கி போடு என மோகன் வைத்தியா கூற, என்னால் முடியாது எனக்கு பிடிக்கவில்லை என்றால் இங்கே தான் தூக்கி எறிவேன் என கூறுகிறார் லாஸ். அதே போல், நடுவராக இருக்கும் சாக்ஷி தனக்கு மரியாதை இல்லை என கோவப்பட்டு கொண்டு செல்கிறார்.
அந்த ப்ரோமோ இதோ..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.