ரோட்டு கடையில்... கயிற்று கட்டிலில் அமர்ந்து ருசித்து சாப்பிடும் அஜித்! இதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?

Published : Sep 06, 2019, 01:17 PM ISTUpdated : Sep 06, 2019, 01:27 PM IST
ரோட்டு கடையில்... கயிற்று கட்டிலில் அமர்ந்து ருசித்து சாப்பிடும் அஜித்! இதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?

சுருக்கம்

தல அஜீத் ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், பாலக்காடு தமிழ் ஐயரான சுப்ரமணியம் என்பவருக்கும், கொல்கத்தா  சிந்தி சமூகத்ததை சேர்ந்த மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி பிறந்தார்.   

தல அஜீத் ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், பாலக்காடு தமிழ் ஐயரான சுப்ரமணியம் என்பவருக்கும், கொல்கத்தா  சிந்தி சமூகத்ததை சேர்ந்த மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி பிறந்தார். 

பிறந்தது ஹைதராபாத் என்றாலும், படித்து வளர்ந்தது எல்லாம் சென்னை மந்தைவெளியில் உள்ள நார்தன் ரோட்டில் தான். 10 ஆம் வகுப்பு மட்டுமே படித்த அவருக்கு, அதற்க்கு மேல் படிப்பின் மேல் நாட்டம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் பைக் ரேஸ் மீது, பைத்தியமாக இருந்தார். 

நார்தன் ரோட்டில், உள்ள மெக்கானிக் ஷாப்பில் சில காலம் வேலை செய்தார். மேலும் சொந்தமாக ஒரு மெக்கானிக் ஷாப்பை நடத்தி கொண்டே திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்தார். அப்போது தான் இவரை தேடி சில விளம்பர பட வாய்ப்புகளும் வந்தது. எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல். கடந்த 1990 ஆண்டு வெளியான 'என் வீடு என் கணவர்' என்கிற படத்தில் ஒரு பள்ளி மாணவனாக நடித்தார்.

இதை தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு, அமராவதி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.  இந்த படத்தை தொடர்ந்து பவித்ரா, பாசமலர், போன்ற படங்களில் அஜித் நடித்தாலும், இவரின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றால் அது, காதல் கோட்டை திரைப்படம் தான். 

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். நடிப்பில் கவனம் செலுத்தி கொண்டே, பைக் ரேஸ் போன்றவற்றிலும் கவனம் செலுத்தியது மட்டும் இன்றி, Formula 1 கார் பந்தயங்களில் பங்கேற்ற, நரேன் கார்த்திகேயன் போன்ற கார் பந்தய வீரர்களிடம், நட்பை வளர்த்துக்கொண்டார்.

அதே போல் அருப்பு கோட்டையில் நடந்த அவர் திருமணத்தில் மனைவி ஷாலினியுடன் கலந்துகொண்டார். அப்போது அவர் பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் விரும்பி பார்த்த மெக்கானிக் வேலையின் நினைவாக தற்போது வரை அவருடைய பெட் ரூம்மில், பல மெக்கானிக் பொருட்களை வைத்து அலங்கரித்துள்ளார்.

பைக் ரேஸ், மற்றும் கார் ரேஸ் மேல் கொண்ட ஆர்வத்தால், மனைவி ஷாலினியை பேட்மிட்டன்  கோர்ட்டுக்கு அனுப்பி விட்டு, இவர் ஷூட்டிங் இல்லாத நாட்களில், தீவிரமாய் ரேஸ் பயிற்சியில் ஈடுபடுவதும் உண்டு. இது போலவே அஜித்துக்கு பிடித்த விசயங்களில் ஒன்று, அடிக்கடி சென்னை - ஓசூர் நெடுஞ்சாலையில் பைக் ரேஸில் ஈடுபடுவது. போகும் வழியெல்லாம், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் அவருக்கு பிடித்த உணவு பார்த்தல் அங்கேயே இறங்கி ஒரு வெட்டு வெட்டுவார்.

அந்த வகையில் இவருக்கு மிகவும் பிடித்த உணவகங்களில் ஒன்று, கிருஷ்ணகிரி அருகே ரமேஷ் என்பவர், ரோட்டு ஓரத்தில் நடத்தி வரும் தாபா. ரமேஷின் உணவை ஒரு முறை சாப்பிட அஜித் அது பிடித்து போனதால், எப்போது அந்த வழியாக பைக் ரேஸ் சென்றாலும், இவரின் கடையில் இறங்கி சாப்பிட மறப்பதில்லை. மிகவும் சைலண்டாக வந்து சைலண்டாக சென்று விடுவார். 

அப்படி ஒரு முறை, அஜித் அந்த தாபாவிற்கு, சென்ற போது... கயிற்று கட்டிலில் அமர்ந்து ஒவ்வொரு உணவையும் ருசித்து சாப்பிட போது எடுக்கப்பட்ட புடைப்படம் தான் இது..., ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் இதுபோன்ற, பைக் ரேஸில் ஈடுபடுவது இல்லை என கூறுகிறது நம்ப தகுந்த வட்டாரங்கள். 

ஏற்கனவே அஜித், பெங்களூர் டூ பூனே பைக் ரேஸ் சென்ற போது, ரோட்டில் உள்ள டீ கடையில், டீ குடித்த புகைப்படம், வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?