
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரது மனதை கவர்ந்த தேவதையாக இருப்பவர் லாஸ்லியா. ஓவியாவை அடுத்து இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் உருவாகியுள்ளனர்.
ஆனால், இவர் மிகவும் சேப் கேம் விளையாடி வருவதாக சிலர் இவருக்கு எதிராக வெளிப்படையான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். லாஸ்லியாவின் தோழிகளோ வரும் வாரங்களில் அவருடைய மற்றொரு முகத்தையும் ரசிகர்கள் பார்க்கலாம் என ஊடகங்களுக்கு போன் மூலம் கொடுத்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
தற்போது கவினின் காதல் வலையில் லைட்டாக சிக்கி உள்ள லாஸ்லியா வரும் நாட்களில், உண்மையாக அவரை காதலிப்பாரா? அதனால் ஏதேனும் பிரச்சனைகள் எழுமா என்பதே... பிக்பாஸ் வீட்டில் சண்டையை ரசிக்கும் சிலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள ப்ரோமோ ஒன்றில், போட்டியாளர்களுக்கு பட்டாம் பூச்சி பிடிக்க கற்று கொடுக்கிறார் லாஸ்லியா. அதுவும் பறந்து கொண்டே... ஓ... பட்டர் ஃபிளை என்கிற பாடலை பாடி கொண்டே பிடிக்க வேண்டும் என அபிராமியிடம் லாஸ்லியா கூறும் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.