ரூ.10 லட்சத்தை ஏமாந்த லொள்ளு சபா மனோகர்...வருமானமின்றி தவிக்கும் பிரபல காமெடி நடிகர்...

Kanmani P   | Asianet News
Published : Jan 01, 2022, 10:55 AM ISTUpdated : Jan 01, 2022, 10:56 AM IST
ரூ.10 லட்சத்தை ஏமாந்த லொள்ளு சபா மனோகர்...வருமானமின்றி தவிக்கும் பிரபல காமெடி நடிகர்...

சுருக்கம்

பிரபல காமெடி நடிகர் லொள்ளு சபா மனோகர் மூன்று வருட காலமாக வேலை இன்றி தவிப்பதாக  தெரிவித்துள்ளார்.  

கொரோனா ஊரடங்கில் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் முன்னணி நடிகர்கள் தவிர குணசித்திர நடிகர்கள் பலரும் ஏழ்மையின் பிடியில் சிக்கியுள்ளனர். ஏற்கனவே துளசி,  தீப்பட்டி கணேசன், பறவை முனியம்மா, சிவசங்கர் மாஸ்டர், ரெங்கம்மா பாட்டி உள்ளிட்டோரின் கதை நாம் ஏற்கனவே அறிந்ததுதான். அதோடு மருத்துவ செலவுக்கு பணமின்றி தவித்தவந்த பிரபலங்களின் நிலை குறித்து ஊடகங்கள் வாயிலாக அறிந்த பிறகே முன்னணி திரை பிரபலங்கள் உதவிக்கரம் நீட்டினார்.

ஏழ்மையில் தவித்து வரும் நடிகர்களின் பட்டியலில் நடிகர் மனோகரும் சேர்ந்துள்ளார். லொள்ளு சபா மூலம் பிரபலமான மனோகர் தனது சிறப்பான பாவனை மூலம் மக்களை கவர்ந்தவர். இதன் பின்னர் வடிவேலு, சந்தானம்  உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் மனோகர் நடித்துள்ளார். அவரது கை  அசைவுகள் ரசிகர்களை பெருதும் கவர்ந்தவை.

ஆரம்ப நாட்களில் எல்பிஜி கேஸ் விநியோகம் செய்பவர், அதன்பின்னர் நீதிமன்றத்தில் குமாஸ்தா வேலை, அதன் பின்னர் 8 ஆண்டுகளாக வங்கியில் தற்காலிகப் பணி என வாழ்க்கையை ஓட்டி  வந்த மனோகர், லொள்ளு சபாவிற்கு பிறகு பிரபலமான இவர் கடைசியாக, ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த பேய்மாமா படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்த  பேட்டி ஒன்றில் கொரோனா வருவதற்கு முன்பு மாதம் 30 நாளும் நான் பிசியாக படங்களில் நடித்துக் கொண்டு தான் இருந்தேன். இந்த மூன்று வருடங்களாக எனக்கு எந்த வேலையும் இல்லாமல் மிகுந்த கஷ்டப்பட்டு வருகிறேன். கடைசியாக பேய்மாமா என்ற படத்தில் நடித்தேன். அதன் பின்னர் சரியாக வேலையில்லை.

சந்தானம், வடிவேலு என எல்லா நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். இருந்தாலும் அவர்கள் எல்லாம் அவர்களுக்குத் தேவையான நபர்களைத் தான் கூடவே வைத்து சம்பளம் போட்டு நடிக்க வைக்கிறார்கள். என்னை அப்பப்ப அவர்களுக்கு தேவைப்படும் போது கூப்பிடுவார்கள். அதனால் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு தான் வாய்ப்பு அதிகம் சினிமாவில் கிடைக்கிறது.

ஆனா ஒண்ணு, நாம என்ன வேலை பார்த்தாலும் கொஞ்சமாவது பணத்தை சேமித்து வைக்க வேண்டும். நான் 10 லட்சம் வரை பணத்தை இழந்துவிட்டேன். என்னை ஒருவர் ஏமாற்றிவிட்டார். இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. என கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்