
ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து, முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் எச்.வினோத். மளமளவென வளர்ந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இவர்கள், விஜய், அஜித்தை வைத்து... பல இயக்குனர்களும் இயக்க போட்டிபோடும் நிலையில் அசால்டாக வாய்ப்பை பெற்றனர்.
முன்னணி நடிகர்களின் ஆஸ்தான இயக்குனர்களாக மாறிவிட்ட இவர்கள் அடுத்து யாரை இயங்குவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு உருவாகியுள்ளது. மேலும் 'மாஸ்டர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யின், 66வது அல்லது 67வது படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் அஜித்தை வைத்து ஏற்கனவே 'பிங்க்'படத்தின் ரீமேக்கான 'நேர்கொண்டபார்வை' படத்தை இயக்கிய வினோத், தற்போது பரபரப்பாக உருவாகி வரும் 'வலிமை' படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் குறித்து அப்டேட் கேட்டு வரும் ரசிகர்களுக்கு விரைவில் படக்குழு பதிலளிக்கும் என அஜித் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
நீண்ட கால நண்பர்களான... லோகேஷ் கனகராஜ் மற்றும் எச்.வினோத் ஆகியோர் தற்போது பல மாதங்களுக்கு பின் சந்தித்து கொண்டுள்ளனர். இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் "நீண்ட இடைவெளிக்குப்பின் சகோதரர் வினோத்தை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இயக்குனர் எச்.வினோத்துடன்... முகத்தில் புன்னகை பொங்க, இவர்கள் எடுத்து கொண்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.