எடப்பாடியை தூக்கிட்டு சினிமாத் துறையை சேர்ந்தவரை முதல்வராக்குவோம் - லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய டைரக்டர்…

 
Published : Oct 06, 2017, 10:00 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
எடப்பாடியை தூக்கிட்டு சினிமாத் துறையை சேர்ந்தவரை முதல்வராக்குவோம் - லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய டைரக்டர்…

சுருக்கம்

Let get cm from cinema industry - director ...

வரி வாங்க வரிசையில் நிற்கும் அரசு திரைத்துறைக்காக என்ன செய்தது. தற்போதுள்ள எடப்பாடி அரசு எதைப் பற்றியும் கவலையில்லாமல் உள்ளது, முதல்வர் பதவிக்கு சினிமாத் துறையை சேர்ந்தவரை கொண்டுவர தயங்க மாட்டோம் என்று இயக்குனர் சாய் ரமணி தமிழக அரசை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிட்டார்.

இயக்குனர் சாய் ரமணி செய்தியாள்ர்களுக்கு அளித்த பேட்டியொன்றில், “ஏதோ ஒரு சில நடிகர்கள்தான் கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். பல நடிகர்கள் இன்னமும் பெட்ரோல் போடக்கூட காசு இல்லாமல் சுற்றுகின்றனர்.

நாட்டில் கஞ்சா விற்பவர்களும், கள்ளச்சாராயம் விற்பபவர்கள் கூட பதுங்கி பதுங்கி விற்கின்றனர். ஆனால், தன் சொத்தையே விற்று படத்தை எடுப்பவர்களின் படமோ, தைரியமாக ரோட்டோரங்களில் அனைவரின் முன்னிலையிலும் சிடி போட்டி விற்று வருகின்றனர்.

சிடி போட்டு விற்பவர்கள் கூட அதற்கான 30 ரூபாயை முழுசா எடுத்துப் போகிறான். ஆனால் கோடிக்கணக்கில் பணத்தை போட்டு படத்தை எடுத்தவன் தலையில் துண்டை போட்டுதான் போக வேண்டியிருக்கு. இதை தடுக்க அரசு என்ன தான் இதுவரை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒவ்வொரு படத்துக்கும் வரி கேட்க மட்டும் வரிசையில் வந்து நிற்பவர்கள், எங்கள் பிரச்சனையை தீர்க்க என்ன தான் செய்தீர்கள்? நாங்கள் படமெடுக்க ஒரு ஸ்டூடியோவாவது கட்டிக் கொடுத்துள்ளீர்களா?

இதற்குமுன் ஆண்ட முதல்வர்கள் எல்லாம் சினிமாத் துறையில் இருந்து வந்தவர்கள் அதனால் எங்களின் பிரச்சனை அவர்களுக்கு கொஞ்சமாவது தெரிந்திருந்தது.

ஆனால், தற்போதுள்ள எடப்பாடி அரசு எதைப் பற்றியும் கவலையில்லாமல் உள்ளது. மீண்டும் திரைத் துறையில் உள்ளவர் முதல்வரானால்தான் இந்த பிரச்சனை தீருமென்றால், அவர்களை முதல்வராக்க கொஞ்சம் கூட தயங்க மாட்டோம்” என்று ஆவேசமாக பேசினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!