டெலிடெட் சீனை வெளியிட்டு... லோகேஷ் முட்டு கொடுப்பதாக கிண்டலடித்தவர்களுக்கு நெத்தியடி ரிப்ளை கொடுத்த லியோ டீம்

Published : Nov 01, 2023, 06:32 AM IST
டெலிடெட் சீனை வெளியிட்டு... லோகேஷ் முட்டு கொடுப்பதாக கிண்டலடித்தவர்களுக்கு நெத்தியடி ரிப்ளை கொடுத்த லியோ டீம்

சுருக்கம்

லியோ படத்தில் மன்சூர் அலிகான் சொல்லும் போலியான பிளாஷ்பேக் டெலிடெட் சீனை படக்குழு வெளியிட்டு விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

லியோ படம் வெளியான பின்னர் அதில் ஒளிந்திருக்கும் பல்வேறு விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தன. அதில் ஒன்று தான் மன்சூர் அலிகானின் fake பிளாஷ்பேக். லியோ தாஸ் யார் என்பதை தெரிந்துகொள்ள அவருடன் இருந்த நபர்களில் உயிரோடு இருந்தவர் இருதயராஜ் டிசோஸாவாக நடித்துள்ள மன்சூர் அலிகான் தான் என்பதை அறிந்து, சிறையில் இருக்கும் அவரை நேரில் சந்திக்க கவுதம் மேனன் சென்றிருப்பார்.

அப்போது மன்சூர் அலிகானுக்கு மிகவும் பிடித்த மதுபானத்தை வாங்கி கொடுத்து, அவரிடம் லியோ தாஸ் பற்றிய கதையை கேட்பார். அவர் லியோ தாஸ் யார், அவர் பின்னணி என்ன என்பதையும், அவருக்கு எலிசா என ஒரு தங்கை இருப்பது பற்றியும் விரிவாக சொல்லி இருப்பார். படத்தில் அவர் சொல்லும் பிளாஷ்பேக் கதை தான் இரண்டாம் பாதியில் முக்கிய பங்காற்றி இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில், படம் ரிலீஸ் ஆன பின்னர் லியோ படத்தின் இயக்குனர் அளித்த பேட்டியில் மன்சூர் அலிகான் சொன்ன பிளாஷ்பேக் fake ஆனதாக கூட இருக்கலாம். அவர் தான் தன்னுடைய கண்ணோட்டத்தில் சொல்வதாக கூறும் காட்சியை தான் படமாக்கியதாகவும், அந்த காட்சி எடிட்டில் போய்விட்டதாகவும் கூறி புது டுவிஸ்ட் கொடுத்தார். இதைப்பார்த்த ஹேட்டர்ஸ் லோகேஷ் படத்தை ஓட வைக்க முட்டு கொடுப்பதாக கிண்டலடித்தனர்.

இந்த நிலையில், எடிட்டில் தூக்கப்பட்ட மன்சூர் அலிகான் சொல்லும் காட்சிகளை தற்போது லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அதில், “அவன் அவன் 1008 கதை சொல்வான். ஒவ்வொன்னுக்கும் நிறைய கண்ணோட்டம் இருக்கும். இது என்னோட கண்ணோட்டம்” எனக்கூறி லியோ தாஸ் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஹேட்டர்ஸுக்கு லியோ டீம் தரமான பதிலடி கொடுத்துள்ளதாக பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... சமூகவலைதளங்களில் இருந்து விலக முடிவெடுத்த லோகேஷ் கனகராஜ்... எல்லாத்துக்கும் காரணம் ரஜினி தானாம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!
சும்மா பேசாதீங்க; நாங்க நல்லவங்க; எங்க குடும்பம் நல்ல குடும்பம்: அடிச்சுவிட்ட மாணிக்கம்; ஷாக்கான சரவணன்!