லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அதிரடி ஆப்பு வைத்த உயர்நீதி மன்றம்...! 

First Published May 30, 2018, 2:19 PM IST
Highlights
laxmi ramakrishnan solvathellam program banned


பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'சொல்வதெல்லாம் உண்மை'. இந்த நிகழ்ச்சியின் மூலம் குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளை தொலைக்காட்சிக்கு கொண்டு வந்து தீர்த்து வைப்பதாக கூறி, அவர்கள் குடும்ப பிரச்னையை உலக மக்கள் அனைவரையும் பார்க்க வைத்து இதன் மூலம் டி.ஆர்.பியை எடுப்பது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

தொகுப்பாளர்கள்:

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், தொகுப்பாளராக இருந்தவர் பிரபல செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி. இவரை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்தவர் தான் நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன்.

இவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு அம்மணி படத்தின் படப்பிடிப்பு நேரத்தில், இந்த நிகழ்சிக்கு சிறு இடைவெளி விட்டார். அப்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பிரபல நடிகை சுதா சந்திரன்.

செட்டில் மாற்றம்: 

மேலும், சில வருடங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியின் செட்டில் சிறு மாற்றம் செய்து,  புதுமைகளை புகுத்தி இந்த நிகழ்ச்சியை துவங்குவதாக நிகழ்ச்சி நிர்வாகம் தெரிவித்தது. பின் இந்த கும்ப பிரச்சனை நிகழ்ச்சிக்கு மீண்டும் தொகுப்பாளராக லட்சுமி ராமகிருஷ்ணன் ரீஎன்ட்ரி ஆனார். 

வழக்குகள்:

இது வரை பலரது குடும்பத்தில் கும்மி அடித்துள்ள இந்த நிகழ்ச்சியின் மீது பல புகார்கள் உள்ளது.  இருப்பினும் சட்ட ரீதியாக அனைத்து புகார்களையும் தொலைக்காட்சி நிர்வாகம் சந்தித்து தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்தது.

உயர்நீதி மன்றம் தடை:
   
இந்நிலையில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஒளிபரப்ப உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிகழ்ச்சி தனிமனித சுதந்திரத்தை பறிப்பதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதி மன்ற மதுரை கிளை, இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, இடைக்கால தடை விதிக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

click me!