நயன்தாரா குறித்த கமெண்ட்... லட்சுமி ராமகிருஷ்ணனை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்...!

 
Published : Nov 26, 2017, 01:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
நயன்தாரா குறித்த கமெண்ட்... லட்சுமி ராமகிருஷ்ணனை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்...!

சுருக்கம்

laxmi ramakrishnan commet for nayanthaara

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகை, தொகுப்பாளர் என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து சாதித்து வருபவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் பிரபல தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தார்.

தற்போது இவர் நடிகை நயன்தாரா நடித்து வெளியாகியுள்ள 'அறம்' படத்தைப் பார்த்துவிட்டு எப்போதும் மனதில் தோன்றும் கருத்துக்களை தெரிவிப்பது போல் இந்தப் படத்தைப் பற்றியும் இந்தப் படத்தில் நயன்தாராவின் நடிப்பைப் பற்றியும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்... 'அறம்' திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும் அதோடு நிறுத்தாமல் ரசிகர்கள் கோபப்படும் அளவிற்கு ஒரு சில கருத்துகளையும் தெரிவித்துள்ளார். 

அது என்னவென்றால், நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள், அவரின் திறமைகளை நாங்கள் பார்க்கவிடாமல் செய்யாதீர்கள். மேலும், அறம் படத்தின் கிளைமேக்ஸில் நயன்தாராவின் காலில் விழும்படி ஒரு காட்சி இருக்கின்றது. பெற்றோர்களைத் தவிர்த்து வேறு யார் காலிலும் விழக்கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும்  அந்தக் காட்சியைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் பயமாக இருந்தது, தமிழகம் காலில் விழும் பழக்கத்திலிருந்து மீள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

இவரின் இந்தக் கருத்துக்கு நயன்தாரா ரசிகர்கள் மட்டும் இன்றி பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். காரணம்... இவர் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பலர் இவருடைய காலில் நிஜத்தில் விழுந்துள்ளனர்  அவர்கள் விழும்போது இது போன்ற கருத்தை வெளியிட வேண்டியது தானே. நடிப்புக்காக நயன்தாரா காலில் விழுந்ததைப் பார்க்கும் போதுதான் கருத்து தோன்றுகிறதா என வெளுத்து வாங்கியுள்ளனர் ரசிகர்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்
நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு