கொள்ளையடித்த பணத்தில் சினிமா தயாரிப்பாளரான ‘லலிதா ஜுவெல்லரி’ முருகன்...நடிகைக்கு 6 லட்சம் அட்வான்ஸ்...

By Muthurama LingamFirst Published Oct 5, 2019, 9:39 AM IST
Highlights

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பிரபலமான க்ரைம் தொடர்களுள் ஒன்று 'மணி ஹீஸ்ட்' (Money heist). 'லா காசா டி பேபல்' என்ற ஸ்பானிஷ் பெயரில் வெளியாகியுள்ள இந்த சீரிஸ், ஸ்பெய்னின் மத்திய வங்கியைக் கொள்ளையடிக்க கும்பலாகத் திட்டமிடுவதும், கொள்ளையடிப்பதும் தொடர்பான கதையைக் கொண்டது. இந்தத் தொடர் உலகம் முழுவதும் வங்கிக் கொள்ளையர்களிடையே பிரபலமாக உள்ளது.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைச் சம்பவத்தில் பிடிபட்ட மணிகண்டன், தங்கள் தலைவன் முருகன் தான் என்றும் இதற்கு முன் கொள்ளையடித்த பணத்தில் அவர் தெலுங்குத் திரைப்படம் தயாரித்ததாகவும் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். அத்துடன்  கொள்ளையடிப்பதற்குத் திட்டம் தீட்டுவதற்காக, நெட்ஃப்ளிக்ஸ் தொடர் ஒன்றைப் பார்த்ததாகக் சொல்லி இருக்கார்.

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பிரபலமான க்ரைம் தொடர்களுள் ஒன்று 'மணி ஹீஸ்ட்' (Money heist). 'லா காசா டி பேபல்' என்ற ஸ்பானிஷ் பெயரில் வெளியாகியுள்ள இந்த சீரிஸ், ஸ்பெய்னின் மத்திய வங்கியைக் கொள்ளையடிக்க கும்பலாகத் திட்டமிடுவதும், கொள்ளையடிப்பதும் தொடர்பான கதையைக் கொண்டது. இந்தத் தொடர் உலகம் முழுவதும் வங்கிக் கொள்ளையர்களிடையே பிரபலமாக உள்ளது.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைச் சம்பவத்தைத் திட்டமிட்ட 'திருவாரூர்' முருகன் இந்தத் தொடரை அதிகமாகப் பார்க்கக் கூடியவராக இருந்திருக்கிறார் எனக் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார் பிடிபட்ட மணிகண்டன்.கொள்ளையடித்த நகைகளுடன் மணிகண்டன் சிக்கியது தொடர்பாகக் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ரவுடிகள் மற்றும் கிரிமினல்களைத் தொடர்ந்து கண்காணித்து வரும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், சிசிடிவி காட்சிகள் மூலமாகத் திருடர்கள் அணிந்திருந்த சாதாரண செருப்பு, அவர்களின் கால் நிறம் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு, இந்தத் திருட்டை வடமாநிலக் கொள்ளையர்கள் செய்யவில்லை எனவும், இது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் கைவரிசைதான் எனவும் கண்டுபிடித்துள்ளார்.

பிடிபட்டுள்ள மணிகண்டன், `` எங்களுக்கெல்லாம் பாஸ் 'திருவாரூர்' முருகன் தான். 'மணி ஹீஸ்ட்' தொடரில் வரும் புரொஃபசரைப் போல, முருகனும் நடமாடும் வேனிலேயே வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருப்பவர்" எனத் தெரிவித்திருக்கிறார்.'திருவாரூர்' முருகன் சுவரில் துளையிட்டுத் திருட்டுச் சம்பவங்களை நிகழ்த்துவதில் பிரபலமானவர். தற்போது உடல்நிலை குன்றியநிலையில் இருக்கும் முருகன் நடமாட முடியாத சூழலில் இருக்கிறார். நடமாடும் வேன் ஒன்றில் வாழ்ந்து வரும் முருகனைப் பிடிக்க, தமிழக காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.

'Money heist' பாணியில், வெளியில் இருந்து உதவும் புரொஃபசர், திருடர்களின் உடை, முகமூடி, சுவரில் துளை எனப் பல்வேறு ஒற்றுமை அம்சங்களைக் கொண்டுள்ளது இந்தத் திருட்டுச் சம்பவம் என்பதுதான் ஹாட் டாபிக்.இந்நிலையில் முருகனுக்கு சினிமா ஆசையும் சேர்ந்து கொள்ள, 50 லட்ச ரூபாய் முதலீட்டில் பாலமுருகன் புரடெக்சன் என்ற பெயரில் சினிமா கம்பெனி தொடங்கி, மனாசா வினாவா என்ற தெலுங்குபடத்தை தயாரித்த தகவலும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

கதாநாயகிக்கு 6 லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்த முருகன், தனது அக்காள் மகனும், இப்போது பிடிபட்டு உள்ளவனுமான சுரேசை அந்த படத்தில் நடிக்க வைத்து உள்ளான். ஆனால் அந்த படம் வெளியாகாத நிலையில் மீண்டும் திருட்டு, கொள்ளை என்று ஈடுபட்டு சிறைக்கு சென்ற முருகன், விடுதலையான பின்னர் ஆத்மா என்ற மற்றொரு படத்தை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டான்.

ஆனால் இப்போது குணப்படுத்த முடியாத நோயின் பிடியில் முருகன் சிக்கி உள்ளதாகவும், இதனால் மருத்துவ வசதிகளுடன் கூடிய ஒரு வேனில், அவன் ஊர், ஊராக சென்று கொண்டே இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. வேனிலேயே வாழ்ந்து வரும் முருகனைப் பிடிக்க, தமிழக காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.


 

click me!