அம்மனாக தரிசனம் தந்து பரவசப்படுத்திய நயன்தாரா... பட்டையைக் கிளம்பும் “மூக்குத்தி அம்மன்” செகண்ட் லுக்...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 29, 2020, 10:34 PM IST
Highlights

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதல் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டிருந்த படக்குழு, அதில் நயன் தாராவின் பாதி கெட்டப் மட்டுமே தெரிந்ததால் நயன் ஃபேன்ஸ் ரொம்ப அப்செட் ஆனாங்க. 

ஆர்.ஜே.பாலாஜி , என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் மூக்குத்தி அம்மன். இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நயன்தாரா அம்மன் கெட்டப்பில் நடிக்க உள்ளதாகவும் அதற்காக விரதம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியான.

அதுமட்டுமல்லாது கன்னியாகுமரியில் இந்த படத்திற்கான ஷூட்டிங்கில் பங்கேற்ற நயன்தாரா,  காதலர் விக்னேஷ் சிவனுடன் கோவில், கோவிலாக சென்று வழிபாடு நடத்தினர். அந்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. நயன் எங்க பாஸ் விரதம் இருக்க போறாங்க... காமெடி பண்ணாதீங்க என கலாய்த்த நெட்டிசன்கள் அனைவரும் லேசாக நம்ப ஆரம்பித்தனர்.

இதையும் படிங்க: ஒரு வழியா தளபதி விஜய்க்கும் விஜய் சேதுபதி முத்தம் கொடுத்தாச்சு... போட்டோவும் வந்தாச்சு...!

எல்.கே.ஜி படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் சென்னையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்த படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

And here it is ...!
Second look of ..! 🔥🔥🔥 pic.twitter.com/KE82sLXE3K

— RJ Balaji (@RJ_Balaji)


மே மாதம் திரைக்கு வர உள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதல் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டிருந்த படக்குழு, அதில் நயன் தாராவின் பாதி கெட்டப் மட்டுமே தெரிந்ததால் நயன் ஃபேன்ஸ் ரொம்ப அப்செட் ஆனாங்க. இந்நிலையில் தற்போது இரண்டாம் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் முழுக்க முழுக்க அம்மனாகவே மாறி ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார் நயன்தாரா. ஃபர்ஸ்ட் லுக்கை விட செகண்ட் லுக் செம்ம டக்கராக இருப்பதால் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

click me!