’உப்பு நீரில் தாமரை மலராது என்பது கூடவா இந்த தமிழிசைக்குத் தெரியாது?’...பரிதாபப்படும் குஷ்பூ...

By Muthurama LingamFirst Published May 5, 2019, 1:17 PM IST
Highlights

’உப்பு நீரில் தாமரை மலராது என்பது கூடத் தெரியாத தமிழிசை மீது மட்டும் எனக்கு ஒரு ஆசை. அவரும் ஒரு பெண் என்பதால் நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கி தோற்க கூடாது. நோட்டாவை விட கூடுதலாக ஓட்டுகள் வாங்க வேண்டும் என்பதே என் ஆசை’ என்று செம கலாய் கலாய்க்கிறார் குஷ்பூ.

’உப்பு நீரில் தாமரை மலராது என்பது கூடத் தெரியாத தமிழிசை மீது மட்டும் எனக்கு ஒரு ஆசை. அவரும் ஒரு பெண் என்பதால் நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கி தோற்க கூடாது. நோட்டாவை விட கூடுதலாக ஓட்டுகள் வாங்க வேண்டும் என்பதே என் ஆசை’ என்று செம கலாய் கலாய்க்கிறார் குஷ்பூ.

இந்தியா முழுக்க காங்கிரஸ் சார்பாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்,’கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய வெளிமாநிலங்களிலும் பிரசாரம் செய்து வந்தேன். அடுத்து டெல்லி செல்ல உள்ளேன். எல்லா பகுதிகளிலும் மோடி மீது வெறுப்பு இருக்கிறது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற விருப்பம் மக்களிடையே இருப்பதை பார்த்தேன். எனவே காங்கிரசின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் கீழ்த்தரமான வார்த்தைகளை எல்லாம் பேசத் தொடங்கிவிட்டார்.ராகுலை பார்த்து உங்கள் தந்தை ஒரு ஊழல்வாதியாகத்தான் இறந்தார் என்கிறார். ஒரு முன்னாள் பிரதமரை இவ்வளவு கீழ்த்தரமாக யாரும் பேச மாட்டார்கள். தோல்வி அடையப் போகும் விரக்தியில் மோடி இப்படியெல்லாம் பேசுகிறார்.அவர் எவ்வளவு குரூரமானவர் என்பதை அவரது பேச்சின்மூலம் உணர்ந்து கொள்ளலாம். அதி.மு.க. வினர் இன்று மோடியை தூக்கிப்பிடிக்கிறார்கள். அவர்களது தலைவி ஜெயலலிதாவையும் குற்றவாளியாகத்தானே இறந்தார் என்று மோடி பேசமாட்டார் என்பது என்ன நிச்சயம்?

தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் பா.ஜனதா போட்டியிடுகிறது. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது. கடலில் தாமரை மலரும் என்று தமிழிசை கூறியிருக்கிறார். உப்பு நீரில் தாமரை மலராது என்பது அவருக்கு தெரியாது போலும். அதற்கு காரணம் அவர்கள் அ.தி.மு.க.வோடு இருக்கிறார்கள். அங்கு ஏற்கனவே தெர்மாகோல் விஞ்ஞானி போல் பலர் இருக்கிறார்கள். அதேபோல் தமிழிசையும் கூறி இருக்கிறார்.

தமிழிசை மீது மட்டும் எனக்கு ஒரு ஆசை. அவரும் ஒரு பெண் என்பதால் நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கி தோற்க கூடாது. நோட்டாவை விட கூடுதலாக ஓட்டுகள் வாங்க வேண்டும் என்பதே என் ஆசை.தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி 35 முதல் 36 தொகுதிகளை கைப்பற்றும் என்பது என் கணிப்பு’என்கிறார் குஷ்பூ.
 

click me!