சுற்றுலா போகணும்... உயர்நீதி மன்றத்தில் குஷ்பு மனு தாக்கல்...

Asianet News Tamil  
Published : Apr 21, 2017, 06:14 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
சுற்றுலா போகணும்... உயர்நீதி மன்றத்தில் குஷ்பு மனு தாக்கல்...

சுருக்கம்

kusboo apeel the high court

பிரபல நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு மதுரை ஐகோர்ட்டில் தனக்கு வெளிநாட்டுக்கு செல்ல அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் பிரச்சாரம் செய்தேன். அப்போது தேர்தல் விதிகளை மீறியதாக ஆண்டிபட்டி போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு ஐகோர்ட் வெளிநாடு செல்ல தடை விதித்தது.

தற்போது இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால், பாஸ்போர்ட் புதுப்பித்துத்தர மறுக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழ்க்கில் நான் வெளிநாடு செல்லும் போது எந்த நாட்டுக்கு செல்கிறேன், எங்கு தங்குறேன் என்று தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்தநிலையில் நான் குடும்பத்துடன் வருகிற 24–ம் தேதி முதல் மாதம் மே 14–ந்தேதி வரை பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா செல்கிறேன். எனவே, நான் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு குஷ்புவின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் குஷ்பு வெளிநாடு செல்ல அனுமதி கிடைக்குமா? என்பது விரைவில் தெரியவரும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீங்க k-drama பிரியரா? மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய சீரிஸ்! Netflixல் இருக்கு
Pushpa 2 Japan : ஜப்பானில் காத்து வாங்கிய அல்லுவின் படம்.. இதுதான் காரணமா? முழு தகவல் உள்ளே