
மாஸ்டர் ஆப் தி பிளாஸ்டர், என பலராலும் பாராட்ட பட்ட விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் இவரது வாழ்க்கை வரலாற்றை தழுவி " சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்" என்கிற திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம்,மராத்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வருடம் மே 21 தேதி வெளியாகும் இந்த திரைப்படத்திற்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதற்கு சச்சினும் ரீட்விட் செய்து தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில், சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ரோலை ஏற்று நடித்துள்ளார் மேலும், டோனி, ஷேவாக், அஞ்சலி டெண்டுல்கர், அர்ஜுன் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.