குறளரசன் பற்றிய வதந்தி..! முற்று புள்ளி வைத்த டி.ராஜேந்தர்!

By manimegalai aFirst Published Mar 18, 2019, 2:53 PM IST
Highlights

தல அஜித் நேரடியாகவே, தனக்கு அரசியலில் ஈடுபட, ஆர்வம் இல்லை என தன் முடிவை கூறி விட்டாலும், தொடர்ந்து சிலர் அஜித் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என தங்களுடைய ஆசையை வெளிக்காட்டி வருகிறார்கள்.
 

தல அஜித் நேரடியாகவே, தனக்கு அரசியலில் ஈடுபட, ஆர்வம் இல்லை என தன் முடிவை கூறி விட்டாலும், தொடர்ந்து சிலர் அஜித் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என தங்களுடைய ஆசையை வெளிக்காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில், பிரபல இயக்குனர் சுசீந்திரன் ட்விட்டர் பக்கத்தில் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என கூறி இருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இது தான் 100 சதவீதம் சரியான தருணம். வா தலைவா. மாற்றத்தை உருவாக்கு. உங்களுக்காக காத்திருக்கும் பலகோலடி மக்களில் நானும் ஒருவன்" என்று கூறியிருந்தார்.

இவரின் இந்த கருத்துக்கு பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அஜித்தை கலாய்க்கும் விதமாக,  நடிகர் சிம்புவின் தம்பி டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் 'குறளரசன்' பெயரை பயன்படுத்தி, 'குரான் அரசன்' என்கிற ட்விட்டர் பகுதி ஒன்றை சில மர்மநபர்கள் உருவாக்கி, அதில் சர்ச்சயை கிளப்பும் வகையில் பதிவிட்டிருந்தனர். இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.பின்னர் இந்த ட்விட்டர் பக்கத்தை மர்ம நபர்கள், நீக்கி விட்டனர்.  

குறளரசன் பதிவிட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து,  விளக்கம் கொடுத்த டி.ராஜேந்தர் இந்த தகவல் முத்திலும் வதந்தி என கூறினார். குறளரசனின் திருமண சமயத்தில் இந்த சர்ச்சை வந்து ஓய்ந்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!